அரியலூர் சிவச்சந்திரன் குடும்பத்தின் பரிதாப நிலை.!! மனநலம் பாதிக்கப்பட்ட சகோதரி., பரிதாபமாக உயிரை விட்ட தம்பி., கர்ப்பிணியாக இருக்கும் மனைவி.!! - Seithipunal
Seithipunal


ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருக்கும் துணை இராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது நடந்த வெடிகுண்டு தாக்குதலில் சுமார் 40 க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் பரிதாபமாக பலியாகினர். இந்த இராணுவ வீரர்களில் இரண்டு பேர் தமிழகத்தை சார்ந்தவர் என்ற தகவல் வெளியாகி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்திய இராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் வெளியான தகவலை கேட்டே மீள முடியாமல்., தவித்து வந்த நிலையில் இந்த தகவலானது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் உடையார்பாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட தா.பழூர் கார்குடி கிராமத்தை சார்ந்தவர் சின்னையன். இவரது மனைவியின் பெயர் சிங்காரவள்ளி, விவசாய குடும்பமான இவர்களின் இரண்டாவது மகன் சிவச்சந்திரன் (33). எம்.ஏ. மற்றும் பி.எட் பயின்றுள்ள இவருக்கு நாட்டின் மீதான பற்று சிறுவயதில் இருந்தே இருந்ததன் காரணமாக இராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற விரும்பியுள்ளார்.

அதன் படி., கடந்த 2010 ம் வருடத்தின் போது நடைபெற்ற இராணுவத்திற்க்கான தேர்வில் கலந்து கொண்டு தேர்வாகி., இராணுவ வீரனாக பணியாற்ற தொடங்கினார். அதே கிராமத்தை சார்ந்த காந்திமதி (வயது 28) என்ற பெண்ணை காதலித்து வந்த., இவர் 2014 ம் வருடத்தில் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் இரண்டு வயதுடைய சிவமுனியன் என்ற மகன் இருக்கும் நிலையில்., காந்திமதி கருவுற்ற நிலையில் இருக்கிறார். ஜனவரி 8 ம் தேதி விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்தார். 

விடுமுறைக்கு வந்த சிவச்சந்திரன் சபரிமலை சுவாமி ஸ்ரீ ஐயப்பனுக்கு மாலை அணிவித்து விரதம் இருந்து கோவிலுக்கு சென்று சுவாமியை தரிசனம் செய்து வந்தார். மேலும்., குடும்ப உறவினர்கள் மற்றும் நண்பர்களை சந்தித்து விட்டு., தனது குடும்பத்துடன் திருச்சி சமயபுரத்தில் இருக்கும் மாரியம்மனை தரிசனம் செய்து விட்டு வந்தார். விடுமுறை நாட்கள் முடியவே., கடந்த 9 ம் தேதியன்று இராணுவத்திற்கு பணியாற்ற சென்றார். சம்பவத்திற்கு முதல் நாளன்று குடும்பத்தாருக்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார். 

மனைவி காந்திமதியிடம் தொடர்பு கொண்டு மகன் சிவமுனியனை கவனித்துக்கொள்ளுமாறும்., தவறாமல் மருத்துவமனைக்கு சென்று தேவையான நேரத்தில் பரிசோதனை செய்துகொள்ளுமாறும் தெரிவித்துள்ளார். சிவச்சந்திரனுக்கு ஜெயந்தி என்ற மூத்த சகோதரியும்., ஜெயசித்ரா என்ற இளைய சகோதரியும்., செல்வச்சந்திரன் என்ற இளைய சகோதரனும் உள்ளார். செல்வச்சந்திரன் கடந்த வருடம் கோயம்பேடு சந்தையில் பணியாற்றிய சமயத்தில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக பலியானார். 

ஜெயந்தி திருமணம் முடிந்து கார்குடி கிராமத்தில் கணவருடன் வசித்து வருகிறார். ஜெயசித்ராவிற்கு மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால்., பெற்றோரின் பராமரிப்பில் இருந்து வருகிறார். ஏற்கனவே ஒரு மகனை இழந்த சோகத்தில் பெற்றோர்கள் தவித்து வந்த நிலையில்., தற்போது சிவச்சந்திரனின் வீரமரணமும் இவர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவச்சந்திரனுக்கு நாட்டின் மீதான பற்று சிறுவயதில் இருந்து அதிகம் என்பதால்., இராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற தொடங்கினார். அவரது உடலை அவரது விவசாய நிலத்தில் அடக்கம் செய்யவுள்ளோம் என்று தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ariyalur army officer sivachandran family details


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->