நான் இந்த சாதி என்னை அமுக்கிறார்கள் என்பது பொய்!! ஏஆர் ரகுமான் அதிரடி!!  - Seithipunal
Seithipunal


ஜாதி, மத ஏற்றத்தாழ்வுகளால் நமது திறமைகள் ஒடுக்கப்படுகிறதா? என்ற கேள்விக்கு இசை ஜாம்பவான் ஏ ஆர் ரகுமான் மிகவும் எதிர்பாராத விதத்தில் ஒரு பதிலை அளித்துள்ளார். அவை பின்வருமாறு:-

"சில கொடுமையான விஷயங்கள் நடந்து வருகின்றது. ஜாதி, மத ஏற்றத்தாழ்வு. நீ மேலே! நான் கீழே! என்பதுபோன்ற வித்தியாசம் நமக்குள் இருப்பது போன்றதொரு மாயை உருவாக்குகிறார்கள். 

அது தவறான விஷயம். ஒருவர் முன்னுக்கு வர வேண்டுமென்றால் அதையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு எப்படி முன்னேறலாம் என்று தான் பார்க்க வேண்டும். இதையெல்லாம் தாண்டி நாம் என்ன செய்கிறோம் என்பதே பிறரால் கவனிக்கப் படுகிறது. 

நம்முடைய திறமையையும், செயல்பாட்டையும் வெற்றியையும் தான் கொண்டாடுகிறார்களே தவிர, நீ என்ன ஜாதி? என்ன மதம்? என்று யாரும் கேட்பதில்லை. உன் வெற்றிக்கு பின்னால் ஜாதி, மதம், மொழி, இனம் எதையும் பார்க்க மாட்டார்கள். 

அனைத்தையும் தூக்கி எறிந்து விடுவார்கள் இது உண்மை நான் உணர்ந்திருக்கிறேன். சிலர் நான் இந்த ஜாதி, இந்த மதம் என்னை ஜெயிக்க விடமாட்டேன் என்று புகார் அளிக்கின்றனர். 

ஆனால், அது தவறு நீங்கள் ஏன் அதை கண்டு கொள்கிறார்கள்? எதையாவது செய்து நமது திறமையை வெளிக்கொண்டு வர வேண்டும். உங்களுடைய திறமையால் மற்ற எல்லாத்தையும் உதைத்து தள்ள வேண்டும். 

அதற்கு சில காலங்கள் ஆகலாம். காலதாமதம் ஏற்படலாம் முயற்சிகள் ஒருபோதும் தோற்காது." இவ்வாறு அவர் கூறியுள்ளார்

இவ்வாறு அவர் கூறியுள்ளது ஆராய்ந்து பார்க்கையில் சரியாகவே தோன்றுகிறது. தோசையில் கூட சாதி இருக்கு என கூறி மக்களிடம் பிரிவினை மனப்பான்மையை வளர்த்து விடுவது முறையானதாக தோன்றவில்லை. 

நமது தமிழகத்தில் குறிப்பாக மத நல்லிணக்கம் மற்றும் சகிப்புத்தன்மை போன்றவை உள்ளன. சாதி ஒழிப்பிற்கு வெறும் பேச்சு மட்டும் எப்பொழுதும் உதவ போவதில்லை. 

சாதியை ஒழிக்க நினைப்பவர்கள் நிச்சயம் தனக்கு கீழ் உள்ளவர்களை பொருளாதார ரீதியில் முன்னதென்ற என்ன வழி என்பதை பார்க்க வேண்டும். 

கல்வி, பொருளாதார முன்னற்றம் தான் ஜாதியை மக்களிடையே காணாமல் போக செய்யும் என ரகுமான் கூறியிருப்பது மிகவும் சரியானதாகவே தோண்றுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AR Rahman says about caste


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->