சமூக வலைதளங்களில் இரவோடு இரவாக வைரலான தகவல்.. மாணவர்களால் மட்டுமே அரசை மண்டியிட வைக்க முடியுமா..? மீண்டும் வெடிக்கும் மாபெரும் "தை" புரட்சி..!! - Seithipunal
Seithipunal


ஒரு ரூபாய் ரெண்டு ரூபாய் என்றால் பொறுத்துக்கொள்ளலாம் ஒரே அடியாக இரட்டை கட்டணத்தை நிர்ணயித்தது மக்கள் தலையில் பெரிய இடியை தூக்கி போட்டுள்ளது தமிழக அரசு.

அரசு பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் வலுத்து வரும் நிலையில் பொதுமக்கள் மட்டுமல்லாமல் அரசியல் கட்சிகளும் போராட்டத்தில் குதித்தன.

தமிழகம் முழுவதும் ஜனவரி 20ஆம் தேதி முதல் பேருந்துக் கட்டண உயர்வு அமலாகியுள்ளது. இதன் மூலம் சாதாரண பேருந்துகளுக்கான கட்டணம் ரூ.1 உயர்த்தப்பட்டுள்ளது.

மாநகரப் பேருந்துகளுக்கான அதிகபட்சக் கட்டணம் ரூ.12ல் இருந்து ரூ.19ஆக உயர்ந்தது. விரைவுப் பேருந்துகளுக்கான கட்டணம் 30 கிலோ மீட்டருக்கு ரூ.17ல் இருந்து ரூ.24ஆக உயர்த்தப்பட்டது.மாற்றியமைக்கப்பட்ட பேருந்து கட்டணம், தனியார் பேருந்துகளுக்கும் பொருந்தும் என் தெரிவிக்கப்பட்டது.

இந்த கட்டண உயர்வுக்குப் பின்பும் அண்டை மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் பேருந்து கட்டணம் குறைவாக இருப்பதாக தமிழக அரசு தெரிவித்து.

இந்நிலையில் கட்டண உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனையடுத்து, மீண்டும் ஒரு போராட்டத்தை சமூக ஊடகங்கள் வழியாக ஒருங்கிணைத்து வருகின்றனர் மாணவர்கள்.

இதற்கென்று குழுக்கள் உருவாக்கப்பட்டு இரவு நேரங்களில் கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் போராட்டம் குறித்த தகவல் அனுப்பப்பட்டு விடுகிறது.

அதற்கு ஏற்றவாறு அடுத்த தினம் தங்களை தயார் படுத்தி கொள்கின்றனர். நேற்று போராடிய மாணவர்களின் மீது சில இடங்களில் காவல் துறை தடியடி நடத்தியது.

இதனால் மேலும் கொதிப்படைந்துள்ள மாணவர்கள் இன்று போராட்டத்தை தீவிரமான முறையில் முன்னெடுத்து செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

another protest initiated in tamilnadu


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->