மீண்டு வந்த ராஜராஜன்..! மகிழ்ச்சி கொள்வதற்குள்..!! மாயமான மற்றும் ஒரு ராஜராஜன்..!!! - Seithipunal
Seithipunal


கல்வெட்டில் குறிப்பிடப்பட்டிருந்த ராஜராஜன் சிலை மாயம்…

தஞ்சையை ஆண்ட ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்திற்குப் பின், அவரது மகன் ராஜேந்திர சோழன், தன் தந்தையின் நினைவாக, ஐப்பசி மாத சதய நட்சத்திர நாளில், பல்வேறு சிவாலயங்களில், சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்தார்.

சிவபெருமனை ஆராதித்து, வீதிகளில் உலா வரச் செய்தார். இந்த விழாவினை, தனது தந்தையான ராஜராஜன் கண்டு களிக்க வேண்டும், என்ற நோக்கத்தில், அவருக்கும் ஒரு சிலை செய்து, சிவபெருமானை வணங்கிய படி உலா வரும் வகையில் ஏற்பாடு செய்திருந்தார்.

இதற்காக, ராஜராஜ சோழனின் செப்புத் திருமேனி, பாபநாசத்தில் உள்ள, 108 சிவாலயக் கோயில் என்றழைக்கப் படும், ராமலிங்கேஸ்வர சுவாமி கோயிலின், அம்மன் சன்னதியின் வலது புறத்தில், இருந்தது.

இந்த சிலை இருந்ததற்கான கல்வெட்டு, இந்தக் கோயிலில், ராஜேந்திர சோழனால் பொறித்து வைக்கப் பட்டுள்ளது. இந்தக் கல்வெட்டை, தமிழக தொல்லியல் துறையினர் படியெடுத்து, அதன் செய்தியினை வெளியிட்டனர்.

ஆனால், அந்தக் கல்வெட்டில் குறிப்பிட்டிருந்த அந்த ராஜராஜன் சிலையை தற்போது, அந்தக் கோயில் வளாகத்தில் காண இயலவில்லை. அந்த சிலை மாயமாகி விட்டது, தற்போது தெரிய வந்துள்ளது.

இதனால், கும்பகோணம் ஜோதி மலை இறைப்பணி திருக் கூட்டத்தின் தலைவர், திருவடிக்குடில் சுவாமிகள், தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு, அந்த சிலையைக் கண்டு பிடித்து தரும்படி மனு அளித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ANOTHER ONE KING RARARAJAN STATUE MISSING


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->