உலக தமிழர்களுக்கு ஐநாவில் நடப்பது தெரியட்டும்... தயவு செய்து ஒளிபரப்புங்கள்: திருமதி சௌமியா அன்புமணியின் அதிரடி பேச்சு..! - Seithipunal
Seithipunal


சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான அமைப்பாக கடந்த 1995-ஆம் ஆண்டு மருத்துவர் இராமதாஸ் அவர்களால்  தொடங்கப்பட்டது பசுமை தாயகம் அமைப்பு. இதன் தலைவராக திருமதி சௌமியா அன்புமணி இருந்து வருகிறார்.

பசுமைத் தாயகம் அமைப்பு ஐக்கிய நாடுகள் அமைப்பின் அதிகாரப்பூர்வ ஆலோசனை அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.

பசுமைத் தாயகம் அமைப்பு தொடங்கப்பட்ட நாளில் இருந்தே சிறப்பான சேவைகளை செய்து வருகிறது.

தமிழ்நாட்டில் மரக்கன்றுகளை நட்டு சுற்றுச்சூழலை பாதுகாப்பது, புகையிலைத் தீமையை ஒழிப்பது, ஈழத்தமிழர் படுகொலைக்கு நீதி கேட்டு 8 ஆண்டுகளாக ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் போராடி வருவது என பசுமைத் தாயகம் அமைப்பின் சமூக சேவைகள் தொடர்கின்றன.

இவை தவிர சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ஆறுகள் பாதுகாப்பு, நிலத்தடி நீர் சேமிப்பு, ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட வேண்டியதன் அவசியம் உள்ளிட்ட மக்கள் நல விவகாரங்களில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

சமீபத்தில் மருத்துவர் அன்புமணி ஐநாவில் தமிழர்களின் உரிமைக்காக குரல் எழுப்பியதை காட்ட அலட்சியம் காட்டியது குறித்து தனது கருத்தை வெளியிட்டுள்ளார். திருமதி சௌமியா அன்புமணி.

பூனை கண்ணை மூடிக்கொண்டால் இருட்டாகிடுமா? தமிழக ஊடகங்கள் எவ்வளவு மறைத்தாலும் ஒரு சில செய்தி ஊடகங்களுடன், சமூக ஊடகத்தில் நாங்கள் வெளியுலகத்திற்கு நாங்கள் சொல்லுவோம் என்று தனது நிலைப்பாட்டை ஆணித்தரமாக பதிவு செய்துள்ளார்.

 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

anbumani voice un nations


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->