தலைமையேற்கும் மருத்துவர் அன்புமணி - தமிழக அரசியலில் நாளை தெறிக்கவிடப்போகும் நிகழ்வு.! - Seithipunal
Seithipunal


ஒரு காசு கொடுக்காமல் பா.ம.க. சாதித்துள்ளது. 23 லட்சம் பேர் வாக்களித்து இருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி. தேர்தலில் போட்டியிட்டவர்கள், தொண்டர்கள் நம்பிக்கையோடு இருங்கள். பா.ம.க. ஆட்சி நிச்சயமாக வரும்.

இந்த தேர்தலில் நாங்கள் வெற்றி பெறாவிட்டாலும் எங்கள் கொள்கைகள் வெற்றி பெற்றுள்ளன. எங்கள் தேர்தல் வாக்குறுதிகளைத்தான் மற்ற கட்சிகள் பின்பற்றியது.

பணம், ஊடகம், தேர்தல் ஆணையம் மூன்றும் சேர்ந்து பா.ம.க.வை தோற்கடித்தது. கருத்து திணிப்பு மூலம் மக்கள் மனநிலையை மாற்றினார்கள்.

இது கடந்த சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்ததும் அன்புமணி பேசிய வார்த்தைகள்.

அப்போது, தமிழகத்தில் ஊழலில் திளைத்த இரு திராவிட கட்சியும் நல்ல கட்சியா? ஜனநாயகம், பத்திரிகை தர்மம், நடுநிலையாளர்கள் வாக்களித்து இருந்தால் அன்புமணி அல்லவா முதல்- அமைச்சர் ஆகியிருக்க வேண்டும்.

தூக்கத்தில் தட்டி எழுப்பி கேட்டால் கூட 32 மாவட்டங்களின் பிரச்சனைகளையும் அதற்கான தீர்வுகளையும் சொல்வார். அந்த அளவுக்கு திட்டங்களை தீட்டி வைத்திருந்தார்.

அரசியல் சாக்கடை என்கிறார்கள். அதை மாற்ற வாருங்கள். 5 லட்சம் பேர் நோட்டாவுக்கு வாக்களித்து இருக்கிறார்கள். நிச்சயம் அவர்கள் படித்தவர்களாகத் தான் இருப்பார்கள். இது எப்படி அரசியலை மாற்றும்? நீங்கள் எதிர் பார்க்கும் மாற்றத்தை எப்படி கொண்டு வரப்போகிறீர்கள்? ' என்று மருத்துவர் இராமதாசும் கேள்விஎழுப்பி இருந்தார்.

அன்று இவர்கள் சொன்னதில் இருந்து, இப்படி தொடர்ச்சியாக பாமகவின் செயல்பாடு நாளுக்கு நாள் மெருகேறி கொண்டே வரும் நிலையில், தமிழகத்துக்கு சரியான தலைமை அன்புமணி தான் என்பதை உணர்த்தியுள்ள சமீபத்திய நிகழ்வுகள்.

காந்திக்கு பிறகு லண்டன் பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்திய தமிழக அரசியல் தலைவர் என்கிற முறையிலும், அவர் முன்னெடுத்து வரும் மக்கள் நல திட்டங்கள் குறித்த செயல்பாடும் எதிர்பார்ப்பை அதிகரிக்கச்செய்துள்ளன.

அந்த வரிசையில் ஊடகங்கள் கலந்து கொள்ளும் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அன்புமணியை அழைத்துள்ளன. மற்ற அரசியல் கட்சி பிரபலங்களை காட்டிலும் புள்ளி விவரங்களுடன்,ஆதாரப்பூர்வமாக பேசுபவர் அன்புமணி மட்டுமே.

ஊடகங்களே அன்புமணியை தலைமையேற்க அழைத்து விட்ட நிலையில், மக்களும் ஒரு நாள் ஏற்றுக்கொள்ளும் நாள் வரும் உறுதியாக கூறியுள்ளனர் அவரது ஆதரவாளர்கள்.

 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

anbumani chief guest media function


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->