சின்னம் கூட தெரியக்கூடாதென்று அ.ம.மு.க கட்சியினர் செய்த இழிவான வேலை..? வேதனையில் உண்மை தொண்டர்கள்.! - Seithipunal
Seithipunal


மக்களவை நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. வரும் ஏப்ரல் 18ஆம் தேதி, தமிழகத்தின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியின் ஒரு தொகுதிக்கும் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.

அதேநாளில் காலியாக 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் மக்களவை தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் எஸ்.டி.பி.ஐ கட்சியுடன் மட்டும் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.

எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு மத்திய சென்னை ஒதுக்கப்பட்டுள்ளது.முதற்கட்டமாக 24 பாராளுமன்ற தொகுதிகளில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலும் 18 சட்ட மன்ற தொகுதிகளில் 9 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலும் கடந்த மார்ச் 17 ஆம் தேதி வெளியிடப்பட்டது.

அதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட சில சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சமீபத்தில் மதுரையில் நடந்த விழாவில் கலந்து கொண்ட அமமுக வேட்பாளர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிக்க சென்றார்.

அப்போது இரட்டை இலை சின்னம் தடுப்பு கம்பியில் இருந்ததை கண்ட அக்கட்சியினர் செருப்பை கொண்டு சின்னத்தை மறைத்தனர்.

இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி, இந்த அளவிற்கு தான் இவர்கள் அம்மா கட்டிக்காத்த கட்சியின் மீது மாதிப்பும் மரியாதையும் வைத்துள்ளனர் என்று விமர்சித்து வருகின்றனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AMMK-persons-hide-two-leaf-symbol


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->