தமிழகத்தில் உள்ள ஊர்களில் பெயர்கள் மாற்றம்! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் ஆங்கிலத்தில் உள்ள ஊர்களின் பெயர்களை தமிழ் மொழிக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சென்னையில் உள்ள 18 ஊர்களின் ஆங்கில பெயர்கள் தமிழ் மொழியில் மாற்றப்பட்டுள்ளது.

சென்னையில் நேற்று தமிழ் வளர்ச்சித்துறையினருடன் மாவட்ட ஆணையர் சண்முக சுந்தரம் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்தில் சென்னையில் ஆங்கிலத்தில் உள்ள ஊர்களின் பெயர்களை தமிழ் மொழியில் மாற்றுவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. 

அதில் தமிழ் மொழியில் சைதாப்பேட்டை என்பதை ஆங்கிலத்தில் சைதாப்பேட் என்று அழைக்கப்படுகிறது. இதே போல், தண்டையார் பேட்டை, சிந்தாரிப்பேட்டை போன்ற பெயர்களை தண்டையார்பேட், சிந்தாரிபேட் என ‘பேட்’ என்று ஆங்கிலத்தில் முடித்துக் கொள்கிறார்கள். மேலும் எழும்பூரை ‘எக்மோர்’ என்றும் திருவல்லிக்கேணியை ட்ரிப்பலிக்கேண் என்றும் ஆங்கிலத்தில் அழைக்கின்றனர்.

சென்னையில் உள்ள ஊர்களின் பெயர்களை தமிழ் மொழிக்கு மாற்றியது போல், தமிழ் நாட்டில் உள்ள ஊர்களின் பெயர்களை தமிழ் மொழிக்கு மாற்றப்படுகிறது. இதற்காக அந்தந்த மாவட்ட ஆட்சியரின் தலைமையில் பெயர் மாற்றுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

all area name change in tamil nadu


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->