சென்னையில் 178 குறியீட்டை தாண்டிய காற்று மாசு.!! பொதுமக்கள் கடும் அவதி!! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் என்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தீபாவளி அன்று இந்தியாவில் 4 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டிதலின்படி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் ஏற்பட்ட காற்று மாசுபாடு காரணமாக கடந்த வாரம் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை வழங்கும் அளவுக்கு காற்று மாசு ஏற்பட்டது.

அதே போன்று சென்னையிலும் காற்று மாசு அதிகரித்து காணப்பட்ட நிலையில் நேற்று 115 ஆக பதிவாகி இருந்த காற்று மாசு இன்று தீபாவளி என்பதால் குறிப்பிட்ட அளவு அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மாலை 4 மணி நிலவரப்படி காற்று மாசு அளவு 178 குறியீடாக பதிவாகியுள்ளது.

கடந்த நவம்பர் 10 ஆம் தேதி சென்னையில் 83 ஆகவும், நேற்று 115 ஆகவும் பதிவாகி இருந்த காற்று மாசு அளவு இன்று அதிகரித்து காணப்படுகிறது. பொதுமக்கள் அதிக அளவில் பட்டாசு வெடித்து வருவதால் காற்று மாசு அதிகரித்துள்ளதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. 

அதிகபட்சமாக மணலில் 224, பெருங்குடியில் 221 குறியீடுகள் என காற்று மாசு பதிவாகியுள்ளது. அதேபோன்று ஆலந்தூரில் 188, வேளச்சேரியில் 179, அரும்பாக்கத்தில் 172 என பதிவாகியுள்ளது. இதனால் சென்னை முழுவதும் புகை மூட்டமாக காட்சியளிக்கிறது. வயதானவர்களும், வாகன ஓட்டிகளும் காற்று மாசினால் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Air pollution in Chennai exceeds 178 units


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->