தான் வளர்த்த வாயில்லா ஜீவனை காப்பாற்ற சென்று தன் உயிரை இழந்த விவசாயி.! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம் வெங்கல் அருகே காதர்வேடு மாத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோவிந்தன். இவர் ஒரு விவசாயி, மேலும் இவர் சில ஆடுகளை வளர்த்து வருவதோடு, தினசரி ஆடுகளை பல்வேறு பகுதிகளுக்கு சென்று மேய்த்துக்கொண்டு வருவார்.

இந்த நிலையில், கொசஸ்தலை ஆற்றில் விவசாயம் செய்ய தண்ணீர் இல்லாததால் அப்பகுதியில் வசிப்பவர்கள் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தனர். அப்போது கோவிந்தன் மேய்ச்சலுக்கு ஓட்டி சென்ற ஒரு ஆடு எதிர்பாராதவிதமாக ஆற்றில் இருந்த ஒரு பள்ளத்தில் விழுந்து விட்டது.

இதனைத் தொடர்ந்து, பள்ளத்தில் விழுந்த ஆடு மேலே ஏறி வரமுடியாமல் தவித்தது. இதனால் கோவிந்தன் அந்த பள்ளத்தில் இறங்கி ஆட்டை காப்பின்றுவதற்கு முற்பட்டார். அப்போது, அவர் அந்த பள்ளத்தில் விழுந்த நிலையில், அவராலும் மேலே ஏறி வர முடியவில்லை.  

இந்நிலையில், பள்ளத்தில் சிக்கி மணலில் புதைந்து விவசாயிஉயிருக்கு போராடினார். அப்போது, அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து அவரை மீட்டு வெளியே எடுத்தனர். ஆனால், அதற்குள் அவர் மூச்சு திணறி இறந்து போனார்.மணலில் புதைந்து விவசாயி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

agriculrurer death in tiruvallur


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->