16 வயதுக்கு மேலானவர்கள் விருப்ப உறவு கொண்டால் குற்றமில்லை!! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை!! - Seithipunal
Seithipunal



தற்போதைய காலகட்டத்தில் பாலியல் தொல்லைகள் தலைவிரித்தாடுகிறது. அதிலும் குறிப்பாக 18 வயதுக்கு குறைவான சிறுவர் சிறுமியர் அதிக அளவில் பாலியல் தொல்லைக்கு ஆளாகிறார்கள். இதற்காகவே 2012ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது போக்சோ சட்டம். இந்தச் சட்டத்தில் குழந்தைகள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல்  குற்றங்களுக்கு தண்டனை வழங்கப்படுகிறது. 

இந்த சட்டம் கொண்டுவந்த பிறகும் இதுமாதிரியான குற்றங்கள் குறைந்தபாடில்லை இந்நிலையில், நாமக்கல்லை சேர்ந்த சபரிநாதன் என்பவர் இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

அவர் அளித்த மனுவில் பாலியல் உறவு கொள்ளும் வயது வரம்பை 18-ல் இருந்து 16 ஆக குறைக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் 16 வயதிற்கு மேற்பட்டவர்கள் விருப்பத்துடன் உடலுறவு கொண்டால் குற்றமாகாது என்று சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

மேலும்,  மது அருந்துதல் மற்றும் புகைப்பிடித்தல் போன்ற தீயபழக்கங்களை ஒழிக்க விழிப்புணர்வு செய்வதைபோல் போக்சோ சட்டம் குறித்தும் விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டும் என நீதிபதி அறிவுறித்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

age limit for posco


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->