தமிழக அரசை விமர்சித்தால், அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும்! அதிமுக எம்எல்ஏ அதிரடி பேச்சு!! - Seithipunal
Seithipunal


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, இரண்டு அடி நீளக் கரும்புத்துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை மற்றும் 5 கிராம் ஏலக்காய் அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்தது. அதன்படி சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000 பணம், பொதுமக்களுக்கு நியாய விலை கடைகள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. 

இதில் பொங்கல் பரிசு தொகை ரூ.1000  உயர் நீதிமன்ற உத்தரவின் படி, சர்க்கரை அட்டைதாரர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சுமார் 2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது.

இதற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதாவது, மக்களவை தேர்தலை மனதில் வைத்து கொண்டு தான், பொங்கலுக்கு ரூ.1000 வழங்குகின்றனர் என்று அதிமுக அரசை குற்றம்சாட்டினார். 
  
இந்நிலையில், மக்கள் எதிர்பார்க்கும் திட்டமான பொங்கல் சிறப்பு பரிசு திட்டத்தை யாரும் விமர்சனம் செய்தால், அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என கள்ளிக்குடியில் அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK MLA SPEECH


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->