பாஜகவிற்கு அதிமுகவில் உறுதி செய்யப்பட்ட தொகுதிகள் மற்றும் மாநிலங்கள் அவை உறுப்பினர் பதவிகள்!! - Seithipunal
Seithipunal


பாராளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு மொத்தம் 7 இடங்கள் அதிமுக அணியில் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் ஒதுக்கப்பட்டுள்ளது. 

பாராளுமன்ற தேர்தலுக்கான அதிமுக கூட்டணி உறுதியாகி உள்ளது. அதிமுக - பாமக - பாஜக இணைந்து இந்த தேர்தலை சந்திக்க உள்ளது. இதில் பாமக - அதிமுக கூட்டணி இறுதியாகி உள்ளது.

பாமக - அதிமுக ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி 7 பாராளுமன்ற தொகுதிகளில் அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிட இருக்கிறது. அதேபோல் ராஜ்ய சபா சீட் ஒன்றும் பாமகவிற்கு அளிக்கப்படும் என்று அதிமுக தெரிவித்துள்ளது.

மேலும் 21 தொகுதிக்கான சட்டமன்ற இடைத்தேர்தலில் பாமக அதிமுகவிற்கு ஆதரவு அளிக்க முடிவெடுத்துள்ளது. இந்நிலையில் இதில் பாஜகவிற்கு எத்தனை இடங்கள் அளிக்கப்படும் என்று விவரங்கள் வெளியாகி இருக்கிறது.

 பாமக 7 தொகுதியில் போட்டியிட உள்ள நிலையில் 8ல் பாஜக போட்டியிட உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

பாராளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு மொத்தம் 7 இடங்கள் அதிமுக அணியில் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் ஒதுக்கப்பட்டுள்ளது. 

இந்த 7 தொகுதியில் பாஜக கூட்டணி கட்சிகளான புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி மற்றும் இந்திய ஜனநாயகக் கட்சி ஆகிய கட்சிக்கு ஒரு ஒரு தொகுதி வழங்கப்படும். பாஜக 4 தொகுதிகளில் போட்டியிடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk announced bjp batches


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->