மாணவர்களை உலகசாதனை படைக்க வைக்கும் நடிகர் அஜித்!. அவரின் பயிற்சியால் உலகமே பயனடையும் கண்டுபிடிப்பு!.. - Seithipunal
Seithipunal


நடிகர் அஜித்குமார் ஆலோசகராக உள்ள அண்ணா பல்கலைகழகத்தின் தக் ஷா மாணவர் குழு கண்டுபிடித்துள்ள குட்டி விமானம் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.

                                 

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆளில்லா விமானங்களை உருவாக்கும் மாணவர்களுக்கு இடையேயான போட்டிகள் நடந்துவருகிறது. இதில் 111 பொறியியல் கல்லூரிகளில் உள்ள மாணவர்கள் தங்களது குட்டி விமானங்களுடன் போட்டி களத்தில் குதித்துள்ளனர்.

இதில் பிரபல நடிகர் அஜித்குமாரை ஆலோசகராக கொண்ட அண்ணா பல்கலைகழகத்தின் தக் ஷா மாணவர் குழு கண்டுபிடித்துள்ள குட்டி விமானம் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. இதனால் அப்பல்கலைக்கழக மாணவர்களும் சந்தோஷத்தில் உள்ளனர்.

தக் ஷா குட்டி விமானம் தொடர்ந்து 6 மணி நேரம் 7 நிமிடம் வானில் பறந்து உலகசாதனை படைத்தது. 10 கிலோ பொருட்களை தூக்கிச்செல்லும் திறன் கொண்ட இந்த ஆளில்லா விமானத்தை ஒரு மருத்துவமனையில் இருந்து மற்றொரு மருத்துவமனைக்கு இருதயம் மற்றும் உடல் உறுப்புக்களை போக்குவரத்து நெரிசலின்றி எளிதாக தூக்கிச்செல்லும் ஆம்புலன்சாக பயன்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திட்ட இயக்குனர்கள் தாமரை செல்வி, செந்தில்குமார் மற்றும் நடிகர் அஜித்குமார், அண்ணா பல்கலைகழக பேராசிரியர்கள் மருத்துவத்துறை நிபுணர்கள் உள்ளிட்டோர் ஆலோசித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Ajith trained the students to find the world record of small flight


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->