அகல் விளக்கு தடை! தொழிலாளிரின் வாழ்க்கை கேள்விக்குறி!! - Seithipunal
Seithipunal


சில மாதங்களுக்கு முன்பாக, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்திற்குப் பிறகு, தொடர்ச்சியாக, தமிழகமெங்கிலும் உள்ள பழமையான புகழ் பெற்ற  சில கோயில்களில் தீப் பிடிக்கத் துவங்கியது.
    
கோயில்களில் கடை வைத்திருப்பதும், மின் கசிவும் ஒரு காரணம் என்று சொல்லப் பட்டாலும், அதன் பிறகு, பாதுகாப்பு கருதி, தமிழகத்தில், இந்து அற நிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள எந்தக் கோயிலிலும் இனி தீபம் ஏற்றக் கூடாது, என்று தமிழக அரசு உத்தரவிட்டது.
    
இதனால், பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். கோயில்களில் தீபம் ஏற்றி வழிபடுவதை, சம்பிரதாயமாக மக்கள் பாவித்து வருகின்றனர். 
    
தீப ஒளி ஏற்றுவதன் மூலம் வாழ்வில் ஒளி கிடைக்கும் என்று, ஆன்மீக சான்றோர்கள் கூறி உள்ளனர். இதனால், கோயில் வளாகங்களில், மண் விளக்கு விற்பனை எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.


    
செவ்வாய், வெள்ளி மற்றும் விசேஷ காலங்களில், மண் விளக்கின் விற்பனை அதிக அளவில் இருக்கும். ஆனால், தற்போது, கோயிலில் விளக்கு ஏற்றத் தடை உள்ளதால், அந்த விளக்கினை செய்து வாழ்க்கை நடத்தி வரும், மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்க்கையே கேள்விக்குறியாகி உள்ளதாக, அவர்கள் தெரிவிக்கின்றனர்.
    
தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த 50-க்கும் அதிகமானோர், திரண்டு வந்து, நேற்று முன் தினம், திண்டுக்கல் கலெக்டரிடத்தில், மனு ஒன்றைக் கொடுத்தனர்.


    
அதில், தங்களின் வாழ்வாதாரமான அகல் விளக்குகளை, கோயில்களில் ஏற்றக் கூடாது, என்ற தமிழக அரசின் உத்தரவிற்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையென்றால், சங்கம் சார்பாக நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

acoustic light barrier in madurai meenaksi amman temple


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->