10 ரூபாய்க்கு ஆசைப்பட்ட ஆசிரியர்.! கை துண்டாகி துடி துடித்த பள்ளி மாணவன்.!! சென்னை அருகே கோரா விபத்து.!! - Seithipunal
Seithipunal


இன்று (16.07.2018) காலை காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூரில் உள்ள பள்ளியில் விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக திருப்போரூர் அரசு பள்ளியில் இருந்து 37 க்கும் மேற்பட்ட மாணவர்களை அழைத்து செல்ல அதிகம் பணம் செலவாகும் என்பதால் உடற்கல்வி ஆசிரியர் அனபரசன் மினி லாரியில் அழைத்து சென்றார்.

இவர்கள் சென்ற வாகனம் ஆலத்தூர் அருகே வந்த போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தலைகுப்புற கழிந்து விபத்துக்குள்ளாகியது. இதில் சிக்கிய மாணவர்கள் கத்தி கூச்சலிட்டனர். அலறல் சத்தம் கேட்டு வந்த அந்த வழியே சென்றவர்கள் லாரியில் சிக்கி இருந்த மாணவர்களை மீட்டனர்.

இந்த விபத்தில் 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயமடைந்தனர், இதில் ஆலத்தூரை சேர்ந்த  பிரகாஷ் என்ற 7 ஆம் வகுப்பு மாணவனின் கை லோடு ஆட்டோவின் கீழ் மாட்டியதில் அவன் கை துண்டானது. விரைந்துவந்த 108 ஆம்புலன்ஸ் மற்றும் பொதுமக்கள் சிலரும் மாணவர்களை உடனடியாக கேளம் பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதில், கை துண்டான மாணவர் பிரகாஷ்ராஜ் மட்டும் ஸ்டான்லி அரசு ஆஸ்த்திரியில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து பற்றி தகவல் அறிந்ததும் மாணவர்களின் பெற்றோர் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் திருப்போரூர் அரசு பள்ளி முன்பு திரண்டனர். பாதுகாப்பு இல்லாமல் மினி லாரியில் மாணவர்களை அழைத்து சென்றதாக ஆசிரியர்கள் மீது குற்றம்சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ACCIDENT NEAR CHENNAI


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->