வாகன தடுப்பு கேட்டில் மோதி கீழே விழுந்த போலீஸ்காரர் மீது மோதாமல் இருக்க, பஸ் டிரைவர் பிரேக் பிடித்ததால், மரத்தில் மோதி பயங்கர விபத்து..!! - Seithipunal
Seithipunal


நேற்று, கோவையில் இருந்து, சிவகாசி நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பழனியை அடுத்த கதிரையன் குளத்தின் அருகே, போடப் பட்டிருந்த வாகன சோதனை தடுப்பு கேட்டில், எதிரில் இரு சக்கர வாகனத்தினை ஓட்டி வந்த போலீஸ்காரர் ஒருவர், அந்த இரும்பு தடுப்பு மோதி கீழே விழுந்து விட்டார்.

இதனைக் கவனித்த அரசு பஸ் டிரைவர், கீழே விழுந்து விட்ட, அந்த போலீஸ்காரர் மீது மோதாமல் இருக்க, சட்டென்று பிரேக் பிடித்தார்.

வாகன சோதனை தடுப்பு இரும்பு கேட்டில், மோதாமல், அந்த பஸ், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சடாரென்று, எதிரில் உள்ள புளிய மரத்தின் மீது மோதியது.

இதனால், பஸ்ஸில் பயணம் செய்த ராம்குமார், கண்டக்டர் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். மேலும் பேருந்தில் பயணம் செய்த 40 பேர் காயம் அடைந்தனர்.

அருகில் உள்ளவர்கள், அவர்களை மீட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ரெட்டியார் சத்திரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

தற்போது, இந்த வழியாக, வாகன தடுப்புகளை, மிக நெருக்கமாக போலீசார் வைத்திருப்பதால், பஸ் உள்ளிட்ட வாகனங்கள், அதைக் கடப்பதற்குள் பெரும் பாடு படுகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ACCIDENT NEAR BY SIVANGANGAI


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->