#கடலூர் || பெரும் பரபரப்பு... அடுத்தடுத்து 7 கார்கள் மோதி விபத்து.!! என்னாச்சு? - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த சிருநெசலூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென விபத்துக்குள்ளானது. 

அதனைத் தொடர்ந்து பின்னால் வந்த 6 கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்தில் சிக்கின. இதில் ஒன்றன் மீது ஒன்று ஏழு கார்கள் மோதியதால் பின்பக்கம் நசுங்கி சேதமடைந்தன.  இந்த விபத்தில் காரில் பயணம் செய்த பயணிகள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் சர்வீஸ் சாலைக்கு மாற்றுவதால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

இந்த விபத்திற்கு காரணம் வேப்பூர் அருகே கிடப்பில் போடப்பட்ட மேம்பாலம் கட்டுமான பணியால் நீண்ட நாட்களாக தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் சர்வீஸ் சாலைக்கு மாற்றப்பட்டுள்ளன. அவ்வாறு தேசிய நெடுஞ்சாலையில் இருந்து வாகனங்கள் சர்வீஸ் சாராயக்கு மாறும்போது இரவு நேரத்தில் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Accident involving seven cars in Cuddalore


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->