4 தொகுதி இடைத்தேர்தலுடன் வேலூர் தொகுதி மக்களவை தேர்தல்?! தலைமை தேர்தல் ஆணையத்தின் முடிவு?!  - Seithipunal
Seithipunal


வேலூரில் திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு தொடர்புள்ள இடங்களில் பணம் பறிமுதல் செய்த விவகாரம் காரணமாக  தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதனால் வேலூரை தவிர்த்து கடந்த 18ம் தேதி தமிழகத்தில் மீதம் உள்ள 38 தொகுதிகளுக்கு மட்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது. 

எனினும், அதன்பின்னர் வேலூரில் காலியாகவுள்ள 2 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மாட்டும் நடந்து முடிந்தது.  வேலூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளராக ஏ.சி.சண்முகம் அறிவிக்கப்பட்டு இருந்தார்.

இந்நிலையில், ஏ.சி.சண்முகம் தலைமை தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளார். இதுகுறித்து டெல்லி சென்று முறையிட்ட அவர் தலைமைத்தேர்தல் ஆணையம் சென்று அங்கிருந்த அதிகாரிடம் மனு ஒன்றை கொடுத்துள்ளார். 

அதிகாரியை சந்தித்து மனு அளித்த ஏசி சண்முகம் "மே 19ந்தேதி தமிழகத்தில் நடக்கும் 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலோடு சேர்த்து நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி இருப்பதாக தெரிகிறது. 4 தொகுதி இடைத்தேர்தலுடன் வேலூர் மக்களவை தேர்தல் நடத்தப்படுமா? தேர்தல் ஆணையம் என்ன முடிவெடுக்கும் என எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ac shanmugam petition to delhi election commission


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->