நீயும் உன் குடும்பமும் நல்லா அனுபவிப்பீங்க!. குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்ட காதல் மனைவியின் உருக்கமான கடிதம்!. - Seithipunal
Seithipunal



மதுரை டிவிஎஸ் நகர் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா, இவர் லாரி டிரைவராக இருந்து உள்ளார். இவரது மனைவி மைக்கேல்ஜீவா, இவர்களுக்கு ஹரிதா என்ற மகளும், ஹரிகிஷோர் குமார் 3 வயது நிரம்பிய மகனும் உள்ளனர்.

இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர், ஆனாலும் மைக்கேல்ஜீவாவின் நடத்தையில் ராஜாவுக்கு சந்தேகம் வந்தது. இதனால் அடிக்கடி இருவருக்கும் சண்டை சச்சரவு ஏற்பட்டு வந்தது. இதனால் மன உளைச்சலில் இருந்துள்ளார் ஜீவா.

இவர்களுக்கு இடையேயான பிரச்சனை தொடர்ந்து கொண்டே சென்றதால் ஒருகட்டத்தில் இரு குழந்தைகளையும் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்ய முடிவெடுத்தார் மைக்கேல்ஜீவா.

இதன்படி நேற்று குழந்தைகளின் முகத்தில் பிளாஸ்டிக் பையை கட்டிவிட்டு, தூக்கு  மாட்டி தற்கொலை செய்தார் மைக்கேல்ஜீவா. இரவு வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிய ராஜாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பின்னர் காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக தகவல் அறிந்து வந்த அதிகாரிகள் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வீட்டில் சோதனையிட்டதில் மைக்கேல்ஜீவா எழுதிய இரண்டு கடிதங்கள் இருந்தன. கடிதம் ஒன்றில், நான் போடும் உயிர் பிச்சை, அதனால் யார் பெயரையும் குறிப்பிட விரும்பவில்லை, எனக்கு செய்த துரோகத்துக்கு நீ அனுபவிப்பாய்.

அதையும் நான் பார்க்கத்தான் போகிறேன், என்னையும், என் குழந்தைகளையும் தவறாக பேசியதால் நொறுங்கி விட்டேன். நீயும் சரி, உன் குடும்பமும் சரி நல்லா அனுபவிப்பீங்க என எழுதப்பட்டிருந்தது.

மற்றொரு கடிதத்தில், அம்மாவை பார்த்துக்கோங்க அக்கா, அனாதை போல் எங்களை எரித்துவிடவும், கணவர் கொள்ளி போடக்கூடாது என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து ராஜாவை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A woman who has committed suicide by killing her children in Madurai has received a letter.


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->