பாமகவுக்கு ஆதரவாக களமிறங்கிய பிரபல நடிகர்!! உற்சாகத்தில் தொண்டர்கள்!! - Seithipunal
Seithipunal


2019 மக்களைவை தேர்தலை முன்னிட்டு நாடு முழுதும் பரபரப்பான அரசியல் நிலவுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக, பாமக, தேமுதிக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ள உள்ளது. 

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாட்டாளிமக்கள் கட்சிக்கு 7 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளது. பாமக 7 தொகுதிகளிலும், வேட்பாளர்களை அறிவித்து தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றது. 

இந்நிலையில், திண்டுக்கல் மக்களவை தொகுதியில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள, பாமகவிற்கு சீட்டு கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாமக சார்பாக ஜோதிமுத்து என்பவர் அங்கு போட்டியிடவுள்ளார். 

அவரை ஆதரித்து அதிமுக மாவட்ட செயலாளர்கள் தீவிர களப்பணியில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில், நடிகர் கஞ்சா கருப்பு பாமக வேட்பளர் ஜோதிமுத்துவிற்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். 

இந்தப் பிரச்சாரத்தின்போது, அதிமுக கூட்டணி கட்சி மற்றும் தேமுதிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A tamil actor supports to pmk


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->