திமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட முக்கிய புள்ளி.!! பழம் தான் காரணமா?!  - Seithipunal
Seithipunal


வரும் 18ம் தேதி தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும், பதினெட்டு சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது/

இந்நிலையில், தருமபுரி மக்களவைத் தொகுதியில், அதிமுக கூட்டணியில் பாமகவைச் சேர்ந்த அன்புமணி ராமதாசும், திமுக சார்பில் செந்தில்குமாரும் போட்டியிடுகின்றனர். இதனையொட்டி தருமபுரி மக்களவைத் தொகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் அன்புமணி.

மேலும் திமுக முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் திமுகவிலிருந்து கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பின்னர் நீக்கப்பட்டார். இதன்பின்னர் தேமுதிகவில் இணைந்தார். கடந்த ஆண்டு மீண்டும் திமுக-விற்கு திரும்பினார். அதன் பின்னர் கோவை பாராளுமன்ற தொகுதியின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட முல்லைவேந்தன், திமுக தலைமை மீது அதிருப்தியில் இருந்துள்ளார். 

இந்நிலையில் தான் பாமகவைச் சேர்ந்த அன்புமணி ராமதாஸ் உடன் முல்லைவேந்தன் சந்திப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் திமுகவில் இருந்து தற்காலிகமாக முல்லைவேந்தனை நீக்கம் செய்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A star politician suspended from dmk


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->