தூத்துக்குடியில் சுனாமி எச்சரிக்கை?! இறந்து கரை ஒதுங்கிய திமிங்கல சுறா.,மீனவர்கள் பதற்றம்!!  - Seithipunal
Seithipunal


கடற்கரையோர மீனவர்களால் அம்மனி உளுவை என அழைக்கப்படும் இந்த சுறாமீன், நேற்றிரவு உடலில் பலத்த காயங்களுடன், கரை ஒதுங்கியுள்ளது. பின்னர் இதுகுறித்து தகவலறிந்த வனத் துறையினர் அதனை மீண்டும் பிடித்து சென்று கடலில் விட்டனர்.

ஆனால், இன்று அதிகாலையில் இறந்த நிலையில் அந்த மீன் கரையொதுங்கியுள்ளது. மீண்டும், தகவல் அறிந்ததும்   வனத்துறையினர் அப்பகுதிக்கு சென்று இறந்த மீனைப் பார்வையிட்டுள்ளனர்.

5.47 மீட்டர் நீளம் (சுமார் 17.5 அடி) உள்ள இந்த பெண் மீன் சுமார் 11/2 டன் எடை கொண்டது. இதனை பார்வையிட்ட கால் நடை மருத்துவர்கள், சந்தோஷ் முத்துகுமார், ஜோல்ராஜ் மற்றும் அபிராமி ஆகியோர் அடங்கிய குழு பிரதே பரிசோதனை செய்தனர்.அதன் பின்னர் கடற்கரை மணலில் புதைக்கப்பட்டது.

இது குறித்து, அப்பகுதி மீனவ மக்கள் " கடல் பரப்பில் ஏற்படும் மாற்றம் காரணமாகவே இந்த வகை மீன்கள் இறந்து கரையொதுங்கும். மேலும், இதனால் சுனாமி போன்ற ஆபத்துக்கள் வரலாம் என்பது எங்களின் நம்பிக்கை.

ஆகவே, இதை நாங்கள் கெட்ட சகுனமாக பார்க்கிறோம். ஆனால் இந்த மீனைப் பொறுத்தவரை கப்பலில் அடிபட்ட காயங்கள் இருப்பதால் அது போன்று எதுவும் நிகழ வாய்ப்பில்லை. இது எங்களுக்கு அச்சத்தை நீக்கி ஆறுதல் அளிக்கிறது" என தெரிவித்துள்ளனர்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A Shark death in thuthukudi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->