பல வீடுகளில் பாத்திரம் கழுவி, வீட்டுவேலை பார்த்து மகனை மருத்துவனாக்கிய ஏழை தாய்!. - Seithipunal
Seithipunal



திருநெல்வேலி மாவட்டத்தில் பல வீடுகளில் வீட்டுவேலை பார்த்து பாத்திரம் கழுவி தனது மகனின் மருத்துவ கனவை நிறைவேற்றியுள்ளார் ஏழை மாணவனின் தாய் சிவசக்தி.

திருநெல்வேலி  மாவட்டம் பாஸ்கர் - சிவசக்தி தம்பதியினரின் இளைய மகன் சுதாகர். இவர்  கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுத விரும்புவதாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளர். அவரின் தாய் சிவசக்தி அந்த பகுதியில் உள்ள பல வீடுகளில் பாத்திரம் கழுவி வீட்டு வேலைகள் செய்து வந்துள்ளார்.

நீட் தேர்வு பயிற்சிக்கு ஒன்றரை லட்ச ரூபாய் வரை செலவாகும் நிலையில், சிவசக்தி வைத்திருந்த அணைத்து நகைகளையும்  விற்றதோடு மட்டுமல்லாமல் அவர் வீட்டு வேலை பார்த்து சேமித்து வைத்திருந்த  பணத்தினை கொடுத்து உதவி செய்துள்ளார்.

ஆனால் கடந்த ஆண்டு அவரால் நீட் தேர்வில் 161 மதிப்பெண்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதனால் அவருக்கு மருத்துவ கனவு நிறைவேறவில்லை. இருப்பினும் பெற்றோர் கொடுத்த ஊக்கத்தால் இரண்டாம் முறை நீட் தேர்வுக்கு எழுதி 303 மதிப்பெண்கள் பெற்ற அவருக்கு, நெல்லை மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.

இதனால் அவரின் தாய் சிவசக்தி மிகவும் மகிச்சியடைந்துள்ளார். தனது தந்தை இதய நோயால் பாதிக்கப்பட்டதால், இதய சிறப்பு மருத்துவராக வேண்டும் என சிவசக்தியின் மகன் சுதாகர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a poor mother got medical sheet for her son


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->