தாயைக் கவனிக்க, விடுமுறை அளிக்க மறுத்ததால், தற்கொலை செய்து கொண்ட  போலீஸ்காரர்…! - Seithipunal
Seithipunal


 

நாகபட்டினம் மாவட்டம், வேதாரண்யம் தாலுகாவில் உள்ள கேத்தாகுடி வடக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் மாமணி (வயது 45). இவர் மயிலாடுதுறையில் உள்ள மது விலக்குப் பிரிவில் பணியாற்றி வந்தார்.

இவருக்கு மனைவி, மகன், மகள் ஆகியோர் உள்ளனர். அவர்களுடன், மாமணியின் பெற்றோரும் வசித்து வருகின்றனர்.

மாமணியின் தாய் சரோஜினிக்கு, கடந்த சில நாட்களாக, உடல் நிலை சரியில்லாமல் போனது. மருத்துவர்களிடம் சென்று தன் தாயைக் காட்டினார். இருப்பினும், நாளடைவில், அவரது உடல் நிலை இன்னும் மோசமானது.

அதனால், தன் தாயாரை, மருத்துவமனையில் சேர்த்து, சிகிச்சை அளித்து பார்த்துக் கொள்வதற்காக, இன்ஸ்பெக்டரிடம் போனில் விடுமுறை கேட்டுள்ளார் மாமணி. ஆனால், விடுமுறை கிடையாது, ன்று போனை துண்டித்து விட்டார் இன்ஸ்பெக்டர்.

இதனால், வேறு வழியில்லாமல், 6 நாள் விடுமுறை கேட்டு, அந்த விடுமுறைக் கடிதத்தை, காவல் நிலையத்தில் ஒப்படைத்து விட்டு, தன் ஊருக்குச் சென்று விட்டார்.

தன் தாயை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கவனித்து வந்தார். மீண்டும், பணிக்கு செல்லத் தயாராகிக் கொண்டிருந்த போது, தனது விடுமுறை விண்ணப்பத்திற்கு, அனுமதி கிடைத்ததா? என்று தன்னுடன் பணி புரிந்து சக போலீசாரிடம் விசாரித்துள்ளார்.

அவர்கள், அனுமதி கிடைக்கவில்லை, என்று கூறி உள்ளனர். இதனால், கடுமையான மன உளைச்சலில் இருந்த மாமணி, தன் வீட்டிலேயே விஷம் அருந்தி மயங்கி விழுந்தார். அவரை, உடனடியாக, தஞ்சை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனாலும், சிகிச்சை பலன் இன்றி, அவர் பரிதாபமாக உயிர் இழந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a police committed suicide


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->