கள்ளத்தொடர்பு தீர்ப்பை அடிக்கோடிட்டு புகாரை ஏற்க தயங்கும் காவல்துறை.!! தீக்குளிக்க தயாராகும் தாய் - மகள்.!! - Seithipunal
Seithipunal


 

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த தாய் - மகள் என்று இருவர் திடீரென தீக்குளிக்க மண்ணெண்ணெய்யை ஊற்றினர். இதனை கண்ட அங்குள்ள காவல் துறையினர் உடனடியாக அவர்களை மீட்டு பிரச்சனை குறித்து கேட்டறிந்தனர். 

அப்போது அவர்கள் தருமபுரி மாவட்டத்தில் உள்ள சோமன அள்ளியை அடுத்துள்ள சோம்பட்டி கிராமத்தை சார்ந்த பழனி என்பவரின் மனைவி ஜெயமதி (46) மற்றும் அவரின் மகள் வெண்ணிலா (27) என்பதும் தெரியவந்தது. 

ஜெயமதியின் மகளான வெண்ணிலாவை., அதே பகுதியை சார்ந்த தென்னரசு என்பவருக்கு கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து வைத்திருக்கின்றனர். மேலும் இவர்கள் இருவரையும் அதே பகுதியில் தனியாக வசித்து வந்துள்ளனர். 

இந்நிலையில்., தென்னரசுருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததால்., இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில்., ஜெயமதி சமாதானம் செய்து வைத்தும்., கள்ளத்தொடர்பை கைவிடக்கூறி கண்டித்துள்ளார். 

அந்த பெண்ணை திடீரென வீட்டிற்கு அழைத்து வந்து இனி இந்த பெண்ணுடன் வாழப்போகிறேன் என்று தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த நாங்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டோம். இதனை அவர் கண்டு கொள்ளாததால் சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். 

இந்த புகாரை ஏற்றுக்கொண்ட காவல் துறையினர் விசாரணை ஏதும் மேற்கொள்ளாமல் இருந்துவந்தனர்., இதனால் ஆட்சியர் குறைதீர்ப்பு கூட்டத்திற்கு வந்த நாங்கள் இருவரும் தீக்குளித்து தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தோம்., ஆனால் காவல் துறையினர் எங்கள் இருவரையும் தடுத்துவிட்டனர். 

இதனையடுத்து., காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற காவல் துறையினர்., இந்த விசயத்திற்கு நீதிமன்றம் அனுமதியளித்துவிட்டது. இதன் காரணமாக எந்த விதமான வழக்குப்பதிவு செய்யவும் இயலாது என்று கூறிவிட்டு அனுப்பிவைத்ததாக தெரிவித்தனர்.  
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A MOTHER AND DAUGHTER ATTEMPT SUICIDE


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->