இரு வருடங்களுக்கு முன்னர்., சண்டையால் குடும்பத்தை பிரிந்த தம்பதி.! காவல் துறையினரின் அதிரடி நடவடிக்கையால் ஆனந்த கண்ணீரில் பெற்றோர்கள்.!!   - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள புளியங்குடியை சார்ந்தவர் காஜா மைதீன் (வயது 37). இவர் கடந்த 2014 ம் வருடம் வரை சென்னையில் பணிபுரிந்து வந்த நிலையில்., தஹ்ரித் நிஷா (வயது 24) என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவருக்கும் நான்கு வயதுடைய ஹனீஷ் அகமது என்ற குழந்தை இருந்த நிலையில்., கடந்த 2016 ம் வருடத்தில் தனது மனைவி மற்றும் மகனை அழைத்து சென்னைக்கு புறப்பட்டார். 

பின்னர் குடும்பத்தாரிடம் இருந்த கருத்து வேறுபாட்டை அடுத்து சென்னைக்கு சென்றதில் இருந்து எந்த விதமான தொடர்பு கொள்ளவில்லை. சில நாட்கள் கழித்தால் அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுவார்., கோபம் குறைந்து விடும் என்ற எண்ணத்தில் குடும்பத்தார் இருந்துள்ளனர். இந்த நிலையில்., அலைபேசிக்கு தொடர்பு கொண்டால் எந்த விதமான பதிலும் இல்லாமல்., தவறான எண் என்று வந்ததை அடுத்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்., இவர்களை சென்னைக்கு சென்று தேடி அலைந்தனர். 

சென்னையை அலசி ஆராய்ந்தும் அவர்கள் கிடைக்காததால்., அவர்கள் ஒரு வேலை பெங்களூருக்கு சென்று இருக்கலாம் என்று நினைத்து பெங்களூருக்கும் சென்று தேடியலைந்துள்ளனர். இவர்களை தேடி அலைந்து எந்த விதமான தகவலும் இல்லாததால் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து இவர்களை தேடி அலைந்த காவல் துறையினர் இவர்கள் கிடைக்காததால்., வழக்கை சி.பி.சி.ஐ.டி காவல் துறையினருக்கு மாற்ற கூறி பரிந்துரைத்தனர். 

இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நீதிபதிக்கு முன்னிலையில் வந்ததை அடுத்து., இன்னும் இரண்டு வாரத்திற்குள் பதிலளிக்க கூறி காவல் துறையினருக்கு உத்தரவிட்டது. இதனையடுத்து சமூக வலைத்தளங்களின் மூலமாக இவர்களின் புகைப்படங்களை பகிர செய்து இவர்கள் குறித்த விபரங்களை அளிக்க கூறி விளம்பரத்தை பகிர்ந்தனர். 

இந்த தகவலானது இணையத்தில் அங்கும் இங்கும் சுற்றி வளம் வந்து பின்னர் எப்படியோ காஜா மைதீனை சென்றடைந்தது. இதனை கண்ட காஜா மைதீன் காவல் துறையினருக்கு தொடர்பு கொண்டு., டெல்லியில் இருக்கும் தனியார் வங்கியில் பணியாற்றுவதாகவும்., தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருவதாகவும் கூறியுள்ளார். 

மேலும்., குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் சென்னையில் இருந்து டெல்லிக்கு வந்தடைந்து., மனஉளைச்சல் காரணமாக குடும்பத்தாருடன் பேசாமல் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். வரும் விடுமுறைக்கு விரைவில் புளியங்குடிக்கு வருகை தருவதாக தெரிவித்துள்ளனர். இதற்கு பின்னர் தனது பெற்றோரிடம் அலைபேசியில் தொடர்பு கொண்ட தம்பதியினர் பேசியதை அடுத்து., பெற்றோர் ஆனந்த கண்ணீரில் நனைந்த சம்பவம் பெரும் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a missing family members discovered by social media taking action by police in thirunelveli


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->