ஜோதிமணிக்கு எதிராக குரலெழுப்பியவருக்கு 'அடி, உதை'., தமிழிசை விவகாரத்தில் இருந்த கருத்து சுதந்திரம் இப்பொழுது எங்கே போனது?! - Seithipunal
Seithipunal


கரூர் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கும், அதிமுக வேட்பாளர் தம்பிதுரைக்கும் கடுமையான போட்டி நிலவி வருகின்றது. கடந்த 2014 மக்களவை தேர்தலில் அதிமுக சபாநாயகர் தம்பிதுரைக்கு ஆதரவாக செந்தில் பாலாஜி கரூரில் வாக்குசேரரித்தார்.

அதன் பின்னர், அதிமுகவில் இருந்து தினகரனுடன் கைகோர்த்த செந்தில் பாலாஜி, தற்பொழுது திமுகவில் இணைந்துள்ளார். ஜோதிமணியை வெற்றி பெற செய்து கரூரை திமுகவின் கோட்டையாக மாற்றுவேன் என தெரிவித்துள்ளார். 
 
இந்நிலையில், அவர் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் வேட்பாளரான ஜோதிமணியுடன் இணைந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார். ஜோதிமணி வாக்கு செள்கரிப்பில் ஈடுபட்ட போது, அங்கிருந்த ஒருவர், "இலங்கையில் தமிழ் இனத்தை கொன்று குவித்த ராட்சசி குழுவிற்கு ஆரத்தி எடுப்பதா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனை தொடர்ந்து திமுக காங்கிரஸ் ஆதரவாளர்கள் அந்த நபரை கடுமையாக தாக்கி உள்ளனர். இதனை, செந்தில் பாலாஜியும், ஜோதிமணியும் வேடிக்கை பார்த்து கொண்டு தடுக்காமல் இருந்துள்ளனர். 

முன்னதாக தமிழிசையை நோக்கி போது அமைதியை குலைக்கும் வகையில் 'ஒழிக' கோஷம் போட்ட சோபியாவை, " கருத்து சுதந்திரம்" என ஆதரித்து ஆவேசமாக மேடை தோறும் பேசினார் ஜோதிமணி. தற்பொழுது " அந்த கருத்து சுதந்திரம் எங்கு சென்றது?' என பலரும் கேட்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A men attacked by jothimani supporters


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->