மன உளைச்சல் அதிகமானதால், பெண் போலீஸ் எடுத்த அதிரடி முடிவு….! பரபரப்பான சம்பவம்….! - Seithipunal
Seithipunal


 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சாக்குடி காவல் நிலையத்தில், முதல் நிலைக் காவலராகப் பணியாற்றி வந்தார் சாவித்திரி (வயது 34). இவரது கணவர் முருகப்பன் வெளி நாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

இவர்களுக்கு 10 வயதில் மகள் இருக்கிறார். சாவித்திரி தன் மகளுடன், காரைக்குடி காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார்.

இடையே, சாவித்திரி கடுமையான மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், தன் மகளை தேவகோட்டையில் உள்ள தன் தாய் வீட்டில் விட்டு வந்த சாவித்திரி, எலி பேஸ்ட்டைத் தின்று, தற்கொலைக்கு முயன்றார்.

அருகில் இருந்தவர்கள், சாவித்திரியை, உடனடியாக, காரைக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக, அவர் மதுரை அரசு மருத்தவமனையில் அனுமதிக்கப் பட்டார்.

இருந்தாலும், சிகி்ச்சை பலன் இன்றி, பரிதாபமாக உயிர் இழந்தார். அவர் தற்கொலை செய்து கொள்ள என்ன காரணம் என்பது பற்றி, காரைக்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a lady police taken a wrong decision,


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->