ஆதார் அட்டையைக் கேட்டு, மாற்றுத் திறனாளிக்கு உதவித் தொகை மறுப்பு….! குடும்பமே, பட்டினியால் பரிதவிக்கும் கொடுமை….! - Seithipunal
Seithipunal


 

திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி அருகே உள்ள, சித்தரேவு கிராமத்தைச் சேர்ந்தவர்கள், இப்ராஹிம் (வயது 70), ஜமீலம்மாள் (வயது 60). இவர்களது மகன், முஜிபுர் ரகுமான் (வயது 19).

இவர், பிறந்ததில் இருந்தே, கடும் ஊனமுற்ற மாற்றுத் திறனாளி. அதனால், இவரால், பள்ளிக்கு கூட செல்ல முடியாத நிலை.

இவருக்கு மாற்றுத் திறனாளிக்கான உதவித் தொகை கிடைத்து வந்தது. இவரது பெற்றோர்களுக்கும், முதியோர் உதவித் தொகை வந்தது. இதை வைத்துத் தான், இவர்கள் கஷ்ட ஜீவனத்தில் குடும்பம் நடத்தி வந்தார்கள்.

இந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக, ஜமீலம்மாளுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித் தொகை நிறுத்தப் பட்டது. இப்ராகிமிற்கும், கடந்த 10 மாதங்களாக உதவித் தொகை நிறுத்தப் பட்டது.

மாற்றுத் திறனாளியான, இவர்களது மகனுக்கும், உதவித் தொகை நிறுத்தப் பட்டுள்ளது. வருவாய்த் துறை அளித்து வரும், உதவித் தொகை வங்கிக்கு சரியாகத் தான் வந்து கொண்டிருக்கிறது.

ஆனால், வங்கியில், ஆதார் சமர்ப்பிக்காததால், இவருக்கு வழங்கப்பட்ட, மாற்றுத் திறனாளி உதவித் தொகை, கடந்த 10 மாதங்களாக, நிறுத்தப் பட்டுள்ளது. இந்த சிறுவனுக்கு, கைரேகை சரியாக இல்லாததால், விரல் ரேகையைக் கொண்டு, ஆதார் எடுக்க இயலாமல் போய் விட்டது.

இதனால், தற்போது இவர்கள் மூவரும் சாப்பாடுக்கு  கூட வழி இல்லாமல், மிகவும் வறுமையில் வாடுகின்றனர். பட்டினியால் பரிதவிக்கின்றனர்.

இது பற்றி, இவர்கள் வங்கியில் சென்று, எவ்வளவோ விளக்கம் அளித்தும், நடையாய் நடந்தது தான் மிச்சம்.

ஆதாரை கட்டாயப் படுத்தி வங்கி உள்ளிட்டவை கேட்கக் கூடாது. அப்படிக் கேட்டால், அவர்களுக்கு சிறை தண்டனை வழங்கப்படும், என்று நீதிமன்றம் உத்தரவிட்டும், இந்த நிலை இவர்களுக்கு தொடர்கிறது.

இவர் கைரேகையைப் பதிவு செய்து, பணத்தை எடுத்துக் கொள்ளலாம், என்று, இறுதியான பேச்சுவார்த்தைக்குப் பிறகு, வங்கி கூறி உள்ளது.

ஆனால், கை ரேகை இல்லாததால், இவரால், அந்த விதத்திலும் பணம் எடுக்க இயலவில்லை.

இது குறித்து, மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்போர் உரிமை சங்கம், “கையே இல்லாதவர்கள் எல்லாம் எப்படி உதவித் தொகை பெறுவார்கள்? வங்கிகள், இதைக் கருத்தில் கொண்டு, இந்த ஏழையின் குடும்பத்திற்கு, வர வேண்டிய நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும், என்று கூறி உள்ளனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a handicapped boy in struggle to get his fund from the bank


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->