கஜா புயலின் பாதிப்பால், தற்கொலை செய்து கொண்ட விவசாயி….! இறந்தும், தொடரும் அவரது துயரம்….! - Seithipunal
Seithipunal


 

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல்  பகுதியில் உள்ள பிரசாசபுரத்தைச் சேர்ந்தவர் வீரமலை (வயது 60). இவர் தனது 3 ஏக்கர் தோட்டத்தில், பேரிக்காயை விவசாயம் செய்து வந்தார்.

கடந்த கஜா புயலின் போது, இவரது தோட்டத்தில் இருந்த நுாற்றுக் கணக்கான மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால், வீரமலைக்கு அதிகமான நஷ்டம் ஏற்பட்டது. அவர் இது குறித்து மிகவும் கவலை அடைந்தார்.

கஜா புயலினால் ஏற்பட்ட சேதங்களுக்கு, அரசு இழப்பீடு தருவதாக அறிவித்திருந்தது. ஆனால், அது வெறும் அறிவிப்போடு மட்டுமே இருந்தது. வீரமலையும், தன் பேரிக்காய் தோட்டத்தில் உள்ள மரங்கள் விழுந்து கிடந்ததைப் பற்றி, எடுத்துரைத்தார். ஆனால், எந்த பதிலும் கிடைக்கவில்லை.

இதனால் மனம் உடைந்த விவசாயி வீரமலை, தோட்டத்திற்குப் பயன் படுத்தும் பூச்சிக்கால்லி மருந்தைக் குடித்து விட்டார். இதனால், அவரை அவரது உறவினர்கள், தேனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்க இயலாத நிலையில், மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால், அங்கும் அவருக்கு சிகிச்சை அளிக்க இயலாது, என்று மருத்துவமனையில் கூறி விட்டதால், அவரை திரும்ப கொடைக்கானலுக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலே, வீரமலை பரிதாபமாக உயிர் இழந்தார்.

அதனால், பிரேதப் பரிசோதனைக்காக, கொடைக்கானல் அரசு மருத்துவமனையில், அவரது பிரேதம் ஒப்படைக்கப் பட்டுள்ளது.

ஆனால், அங்கு பிரேதப் பரிசோதனை செய்ய ஆட்கள் இல்லாததால், மருத்துவமனையிலே, வீரமலையின் உறவினர்கள், அவரது உடலைப் பெறக் காத்திருக்கிறார்கள்.

பல மாதங்களாகவே, கொடைக்கானலில், பிரேதப் பரிசோதனை செய்வதற்கு ஆட்கள் இல்லை. இன்று வீரமலையின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்து, ஒப்படைப்பதாக கூறி உள்ளனர்.

இறந்தும், வீரமலையின் துயரம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a former committed suicide, because of the loss


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->