கோவையில்., மனைவி-குழந்தைகள் மற்றும் தாயாருக்கு விஷம் கொடுத்து கொலை செய்து தற்கொலை செய்து கொண்ட ஆசிரியர்.!! வெளியான அதிர்ச்சி தகவல்., கடிதத்தை படித்து கலங்கிப்போன காவல் துறையினர்.!!   - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டத்தை அடுத்துள்ள கருமத்தம்பட்டியில் உள்ள அமளி நகரை சார்ந்தவர் அந்தோணி ஆரோக்கியதாஸ் (38)., இவர் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கூலிபாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவியின் பெயர் ஷோபனா (வயது 30)., இவர்கள் இருவருக்கும் ரித்திக் என்ற 7 வயதுடைய மகனும்., ரியா ஏஞ்சலின் என்ற 1 வயதுடைய மகளும் உள்ளனர். இவர்கள் அனைவருடனமும் தாயார் புவனேஸ்வரி (வயது 65) வசித்து வந்தார். 

இவர்களின் இல்லமானது உள்புறமாக தாளிட்டு., நேற்று இவர்களது வீட்டில் இருந்து எந்த விதமான நடவடிக்கையும் இல்லாததை கண்டு சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர்., கதவை தட்டி பார்த்த போது எந்த விதமான பதிலும் இல்லாததால் பெரும் அதிர்ச்சியடைந்தார். இந்த சம்பவம் குறித்து உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே., தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் வீட்டின் கதவை உடைத்து வீட்டிற்குள் சென்றனர். 

வீட்டிற்குள் காவல் துறையினர் நுழைந்தவுடன் அந்தோணி தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு பெரும் அதிர்ச்சியடைந்தனர்., மேலும்., மற்றொரு அறையில் 4 பெரும் பிணமாக கிடப்பதை கண்டு பெரும் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து காவல் துறையினர் தனது உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கவே., தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் விரைந்து விசாரணை மேற்கொள்ள துவங்கினர். 

அந்த விசாரணையில்., அந்தோணிக்கு கடந்த 12 வருடங்களாக முதுகு வலி இருந்ததாகவும்., அதற்கு சிகிச்சை பெற்று வந்த அவருக்கு நோய் குணமாகாத மன வருத்தத்தில் இருந்து வந்த அவர் அனைவருக்கும் விஷம் குடுத்து., தானும் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்ற தகவல் வெளியானது. இறந்தவர்களில் அந்தோணியின் மனைவி ஷோபனா மற்றும் குழந்தைகள் ஒரு அறையில் பிணமாகவும்., தாயார் மற்றொரு அறையில் பிணமாகவும் இருந்ததை அடுத்து., அவர்களுக்கு விஷம் கலந்த உணவை வழங்கி அவர்கள் இறந்த பின்னர் அந்தோணி தற்கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.

தற்கொலை செய்து கொண்ட அந்தோணி எழுதி வைத்துள்ள கடிதத்தை கண்ட காவல் துறையினர்., அந்த கடிதத்தில்., அதிக வருடங்கள் இருந்த முதுகு வலியின் காரணமாக வாழ்க்கையில் வெறுப்படைந்து இந்த முடிவை தேடிக்கொள்வதாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a family members attempt suicide


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->