விவசாயிகளிடம், பிரதமர் அறிவித்த பணத்தை வரவு வைக்க வேண்டும், என்று கூறி, ஏ.டி.எம். நம்பரை வாங்கி, 10 லட்ச ரூபாய் மோசடி…! மக்களே, உஷார்….! - Seithipunal
Seithipunal


 

பாராளுமன்றத்தில், சமீபத்தில் நடைபெற்ற இடைக்கால பட்ஜெட்டில், பிரதமர் மோடி, இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்கு, 6000 ரூபாய் நிதி வழங்கப்படும். அவர்களது வங்கிக் கணக்கில் மூன்று தவணைகளாக வரவு வைக்கப்படும், என்று அறிவித்திருந்தார்.

இந்த உதவித் தொகை பெறுவதற்காக, விவசாயிகள் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து, கிராம நிர்வாக அலுவலரிடம் வழங்க வேண்டும். இந்த விண்ணப்பம் வழங்கும் பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சில விவசாயிகளிடம் ஒரு பெண் தொலைபேசியில் பேசி, “நாங்க பேங்க்லேயிருந்து பேசுறோம். உங்கள் கணக்கில் பிரதமரின் முதல் தவணை 2000 ரூபாயை வரவு வைக்க வேண்டும்.

உங்க ஏ.டி.எம். கார்டு நம்பரையும், பின் நம்பரையும் சொல்லுங்க, என்று கூறி உள்ளார். இதை நம்பி பலர் தங்கள் ஏ.டி.எம். நம்பரையும், பின் நம்பரையும் சொன்னார்கள்.

அதன் பிறகு, சில நிமிடங்களில், அவர்களின் வங்கிக் கணக்கில் வைக்கப் பட்டிருந்த பணம் திருடப் பட்டுள்ளது. இப்படி 16 பேரின் வங்கிக் கணக்கில் இருந்து, போலி ஏ.டி.எம். கார்டு வாயிலாக, 10 லட்ச ரூபாய் பணத்தைக் கொள்ளை அடித்திருக்கின்றனர்.

சாணார்பட்டியைச் சேர்ந்த மாரியம்மாள், செட்டி நாயக்கன்பட்டியைச் சேர்ந்த சுந்தரம், வத்தலக்குண்டைச் சேர்ந்த நல்லம்மாள் உட்பட பாதிக்கப்பட்ட 16 பேரும், இது தொடர்பாக, திண்டுக்கல் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

நுாதனமான இந்த திருடர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a different type of theft


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->