வித்தியாசமானதொரு திருமணம்…! தாலி கட்டுவதற்கு முன்பாக, மணமக்கள் செய்த காரியம்…! குவியும் பாராட்டுகள்…! - Seithipunal
Seithipunal


 

திண்டுக்கல்லைச் சேர்ந்தவர்  ஹரிஹரன் (வயது 25). பொறியியல் பட்டதாரி.  இவருக்கும் அனு மோனிஷா என்பவருக்கும், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.

திருமணச் சடங்கு நடைபெறுவதற்கு, ஒரு மணி நேரம் முன்பாக, மணமக்கள், மணமேடையின் அருகிலேயே, இருவரும், ரத்த தானம் செய்தனர். அவர்களது, ரத்தம் சேகரித்து எடுக்கப் பட்டது.

ரத்த தானம் முடிந்து, 1 மணி நேரம் கழித்துத் தான், மணமகன் மணமகள் கழுத்தில் தாலி கட்டினார். திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும், மணமக்களின் இந்த செய்கைக்கு கை தட்டி பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.

மணமகளின் தந்தை பாஸ்கரன், 110 முறை, ரத்த தானம் செய்துள்ளார். மணமகளின் தாயாரும், செவிலியருமான ரமாதேவி, 70 முறை ரத்த தானம் செய்துள்ளார்.

“இந்தக் குடும்பத்தில் பெண் எடுத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். என் மனைவியின் தாயும், தந்தையும் எனக்கு முன் உதாரணமாக இருந்தார்கள்.

அதனால் தான், திருமண மேடையிலே, நாங்கள் ரத்த தானம் அளித்தோம். ரத்தத்திற்கு ஜாதி இல்லை. மதம் இல்லை. ஆனால் வகைகள் மட்டும் உண்டு”, என்று புது மாப்பிள்ளை ஹரிஹரன் கூறினார்.

மணமக்களின் இந்த ரத்ததானம் மற்றவர்களுக்கான சிறந்த விழிப்புணர்வு, என்று இதைக் கேள்விப்பட்ட அனைவரும், அந்த மணமக்களை, மனமார வாழ்த்தினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a different new married couples


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->