காண்டிராக்டர்களிடம் நுாதன முறையில், கொள்ளை லஞ்சம் வாங்கிய அறநிலையத் துறை உதவி ஆணையர்…! இப்படியும் கொள்ளை நடக்குது நாட்டிலே…! - Seithipunal
Seithipunal


 

சேலம், சுகவனேஸ்வரர் கோயில், ராஜ கணபதி கோயில் உட்பட ஆறு கோயில்கள் ஒரே நிர்வாகத்தின் கீழ் உள்ளன. இவை அனைத்தும், அறநிலையத் துறை உதவி ஆணையாளர் தமிழரசு நிர்வாகத்தின் கீழ் உள்ளது.

இங்கு கோயிலில் மூலவருக்கு அணிவிக்கப்படும், வெள்ளி, தங்க ஆபரணங்கள் தனி அறையில் வைக்கப் பட்டுள்ளன. சமீபத்தில், இங்கிருந்த பொருட்கள் எல்லாம் வேறு இடத்திற்கு மாற்றப் பட்டன. காலியான இந்த அறையில், ஒரு டேபிள் மட்டும் போடப் பட்டுள்ளது.

உதவி கமிசனருக்கு லஞ்சம் கொடுப்பவர்களிடம், இந்த அறையின் சாவி கொடுக்கப்படும். அவர்கள் இந்த அறையைத் திறந்து, அங்குள்ள டேபிளில், கவரில் பணத்தை வைத்து, அது யாருக்கு என்ற பெயரையும் எழுதி வைத்து விட வேண்டும்.

சமீப காலமாக, இந்த அறைக்கு விநோதமான பல நபர்கள் வந்து சென்றனர். இது பற்றி பக்தர்கள் சந்தேகங்கள் கேட்டும், உரிய பதில் கிடைக்கவில்லை.

இது குறித்து, லஞ்ச ஒழிப்புப் போலீசாருக்கு தகவல் தரப்பட்டது. அவர்கள், மறைந்திருந்து இங்கு நடப்பதைக் கண்காணித்தனர்.

அப்போது, ஒரு காண்டிராக்டர் அக்கம் பக்கம் பார்த்தபடி, அந்த அறையின் கதவைச் சாவியால் திறந்தார். பின் ஓரிரு நிமிடங்களில் திரும்ப சென்று விட்டார். சற்று நேரத்தில், உதவி கமிசனர் தமிழரசு (வயது 55) அந்த அறைக்குள் நுழைந்து, டேபிளின் உள்ளே இருந்த கவரை எடுத்தார்.

அந்தக் கவரில், தமிழரசு என்று எழுதப்பட்டு, 60 ஆயிரம் ரூபாய் பணம் வைக்கப் பட்டிருந்தது. அந்தப் பணத்தை தமிழரசு எடுக்கும் போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அவரைக் கையும் களவுமாகப் பிடித்தனர்.

ஏற்கனவே, தமிழகம் முழுவதிலும் உள்ள கோயில்களில், எண்ணற்ற சிலைகள் மோசடி நடைபெற்ற நிலையில், இன்னும் அடங்காத, ஒரு அதிகாரி நுாதன முறையில் கொள்ளை அடித்து மாட்டி உள்ளார்.

கொள்ளை அடிக்க எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க……?


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a different method to get pribe


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->