பணி ஓய்வு பெறும் சமயத்தில் தாசில்தார் செய்த காரியம்…! - Seithipunal
Seithipunal


 

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில், கடந்த 2004-ஆம் ஆண்டு, தாசில்தாராகப் பணியாற்றியவர் சௌந்தர்ராஜன் (தற்போது வயது 62).

அப்போது, வெளிச்சம் கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா என்பவர், மீன் கொட்டம் அமைக்க, இவரிடம்  அனுமதி கேட்டு விண்ணப்பம் தந்தார்.

அவருக்கு அனுமதி வழங்குவதற்கு, தாசில்தார் சௌந்தர்ராஜனும், தலையாரி நாகரெத்தினமும், லஞ்சம் கேட்டனர்.

லஞ்சம் தருவதாக ஒப்புக் கொண்ட கருப்பையா, இது குறித்து, ராமநாதாபுரம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாருக்கு தகவல் தந்தார்.

போலீசார் ஏற்பாட்டின்படி, 18-9-2014 அன்று, ரசாயனம் தடவிய, 3 ஆயிரம் ரூபாய் பணத்தை, லஞ்சமாக தாசில்தாரிடம் தந்தார் கருப்பையா.

அப்போது, மறைந்திருந்த, லஞ்ச ஒழிப்பு போலீசார், அந்த தாசில்தாரையும், தலையாரியையும் கைது செய்தனர்.

அந்த நேரம், தாசில்தார், சௌந்தர்ராஜன், பணி ஓய்வு பெறும் தருணத்தில் இருந்தார். அந்த சமயம், லஞ்சம் வாங்கி, கையும் களவுமாக மாட்டினார்.

இந்த வழக்கு, சிவகங்கை, லஞ்ச ஊழல் தடுப்பு சிறப்பு நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சசிரேகா, குற்றம் சாட்டப்பட்ட, சௌந்தர்ராஜன், நாகரெத்தினம் ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

இதனால், அந்த இருவரும் சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a Dhasildar created an incident while the time of retirement


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->