துணை முதல்வரையே வழிமறித்து கேள்வி கேட்ட கல்லூரி மாணவி!! ஓபிஎஸ் கூறிய பதிலால் திகைத்த மாணவி!!  - Seithipunal
Seithipunal


மதுரை அலங்காநல்லூரில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவரது மகனிற்கு ஆதரவாக நேற்று பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளார். சாமி கும்பிட்டு பின்னர் மேளதாளத்துடன் தொடங்கிய இந்த பிரச்சாரம் கலை காட்டியது. 

பின்னர் வரும் வழியில் எல்லாம் ஒட்டு சேகரித்தபடியே நடந்து வந்துள்ளார் பன்னேர்செல்வம். அப்பொழுது அங்கிருந்த பேருந்து நிலையத்தில் நிறைய கல்லூரி மாணவிகள் பேருந்திற்காக காத்திருந்துள்ளனர். 

அப்போது அவரை தேடி வந்த மாணவி ஒருவர், " சார் நீங்க தான துணை முதல்வர்தான?.. கொஞ்சம் நில்லுங்க" என கேட்க, சிறிது கொண்டே மாணவிகள் அருகில் வந்து நின்று, "என்னம்மா நல்லா படிக்கிறீங்களா? பரிச்சைக்கு போறிங்களா?" என கேட்டுள்ளார். 

அதற்கு மாணவி," ஆமா சார் என்னை போன்ற மகள் இல்லையா? உங்களுக்கு?" என கேட்க, ஓபிஎஸ், "ஏம்மா?" என வினவினார். " பொள்ளாச்சியில் என்னை போல மாணவிகளை சீரழிச்சிருக்கிறாங்க. 7வருசமா நடந்ததாக சொல்றாங்க. அரசாங்கத்திற்கு தெரியாமல் எப்படி போச்சு?" என கேட்டுள்ளார். 

அதற்கு ஓபிஎஸ், " வணக்கம்மா! நீங்க சொல்றது சரி தான். அரசாங்கம் இதற்கு சரியான நடவடிக்கை எடுத்து வருதுமா!! குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது. நீ இப்படி தைரியமா கேள்வி கேக்குறியே இதான் ஜனநாயகம்., உன்ன பாராட்டுறேன்" என கூறி சிறிது கொண்டே அங்கிருந்து சென்றுள்ளார். 

சட்ட ஒழுங்கை பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமை. ஆனால், அந்த பெண் என்ன செய்கிறாள் என்பது வீட்டிற்கே தெரியாத அளவு இன்றைய இளைஞர்கள் குடும்பத்துடன் இணக்கமில்லாமல் இருக்கின்றனர். 

அந்த சம்பவ வீட்டு பகுதியில் இருக்கும் மக்களும் இதனை கண்டும் காணாமல் இருந்துள்ளனர். அரசாங்கம் மக்கள் நலனை பார்க்க வேண்டியது அவசியம். ஆனால், குடும்ப கட்டமைப்பை காப்பது தான் பெண்கள் பாதுகாப்பிற்கு வழி வகுக்கும். 

ஜோடியாக திரிபவர்களை போலீஸ் பிடித்து விசாரணை செய்தால், சிறு பெண்கள் கூட " எங்க அண்ணன் . இவன் என் நண்பன்" என பொய்யுரைப்பது. போலீசார் கண்டித்தால் அவர்களை மதிப்பதும் இல்லை. இவையெல்லாம், மீறி சம்பவங்கள் நடக்கிறது. 

பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் நேரம் செலவிடுவது. உற்றார் உறவினர் என அனைத்து விழாக்களுக்கும் அழைத்து செல்வது. உறவினர்களுடன் நெருங்கிய பழக்கத்தை அவர்களுக்கு ஏற்படுத்துவது. என இதில் எதையும் செய்வதில்லை. 

வெளியில் சுற்றி திரிந்தாலும், இது இன்னாருடைய பெண் என உறவினருகே தெரிவதில்லை. இக்கால இளைஞர்கள் தவறு செய்ய அதுவும் ஒரு காரணம். உறவினர்கள் இருந்தால் பயம் இருக்கும் தவறுகளும் தவிர்க்கப்படும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A college girl asking question to ops


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->