தன் செல்லக் குழந்தையை, அங்கன்வாடியில் சேர்த்த திருநெல்வேலி கலெக்டர்….! - Seithipunal
Seithipunal


 

திருநெல்வேலி மாவட்ட கலெக்டராக இருக்கிறார், ஷில்பா பிரபாகர் சதீஷ். இவரது மகள் பெயர் கீதாஞ்சலி. இரண்டே முக்கால் வயதாகிறது.

தன் மகளை பள்ளியில் சேர்க்க முடிவெடுத்த கலெக்டர் ஷில்பா, பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானம் அருகே உள்ள அங்கன்வாடி மையத்தில் சேர்த்துள்ளார்.

அங்கன்வாடிக்குத் தினமும் வரும் கீதாஞ்சலி மற்ற மாணவர்களைப் போல, தரையில் அமர்ந்து, ஆர்வமுடன் கல்வி கற்கிறார்.

இந்த அங்கன்வாடி கல்வி மையத்தில், கீதாஞ்சலியுடன் சேர்த்து மொத்தம் 20 மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு குழந்தைகள் எளிதில் பாடங்களை உணர்ந்து படிப்பதற்கான  கல்வி உபகரணங்கள் உள்ளன.

நடனபாடியபடி கல்வி கற்றல், விளையாட்டு, போதனை போன்றவை கற்பிக்கப் படுகின்றன. அதனை, கலெக்டரின் மகள் ஆர்வத்துடன் செய்கிறார். தன்னுடன் பயிலும் சக மாணவர்களுடன், இயல்பாக பேசிப் பழகுகிறார். இதனால், மற்ற மாணவர்கள் மிகவும் உற்சாகமாக இருக்கின்றனர்.

ஏழை குடும்பத்தில் பிறந்தவர்கள் கூட, தங்கள் குழந்தைகள், கான்வென்டில், ஆங்கில வழிக் கல்வி கற்க வேண்டும், என்று விரும்பும், இந்தக் காலத்தில், நெல்லை கலெக்டர் ஷில்பா, தன் குழந்தையை, அங்கன்வாடியில் சேர்த்ததை, அனைவரும் பாராட்டி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a collector's daughter studying in govt. anganvadi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->