பரவசமான காட்சி…! பல நுாற்றாண்டுகளாக தண்ணீரில் மூழ்கியிருந்த குடைவரை சிவன் காட்சி தந்தார்….! - Seithipunal
Seithipunal


 

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது நார்த்தாமலை. இந்தப் பகுதி முழுவதும், கி.பி.7 முதல் 9-ஆம் நுாற்றாண்டு வரை பல்லவர் மற்றும் பாண்டியர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது.

இந்தப் பகுதியில் வசித்து வந்த முத்தரையர்கள், இவர்களுக்கு கட்டுப்பட்ட குறு நில மன்னர்களாக, நார்த்தாமலைப் பகுதியில் ஆட்சி செய்து வந்தனர்.

நார்த்தாமலை, மேல மலையின் இடையே, இயற்கையான ஒரு குகை ஒன்று உள்ளது. விடேல்விடுகு முத்தரையன் என்பவரது மகனான, “சாத்தன் பழியிலி” (கி.பி.826 – கி.பி. 849) என்ற முத்தரைய குறு நில மன்னன் இங்கு அழகிய குடைவரை சிவன் கோயிலை உருவாக்கினான். இதற்கு, “பழியிலி ஈச்சுரம்” என்று பெயர்.

இந்தக் குகையின் நடுவில், குடைவரையாக உருவான திருமேனியை, இந்தக் குகையில் உள்ள இயற்கையான சுனை நீர் நிரம்பி, இந்தக் குளம் எப்போதும் மூடியே காணப்படும்.

இறுதியாக, இந்தப் பகுதியை ஆண்ட, பாளையக்காரரின் மனைவி, இந்தக் குளத்து நீரை இறைத்து, இங்குள்ள இறைவனுக்கு பூசைகள் செய்தார். அது குறித்து, அந்தக் குளத்திற்கு மேலே, தமிழ்க் கல்வெட்டில் பொறிக்கப் பட்டுள்ளது.

இப்படி பல நுாற்றாண்டுகளாக மூடி இருந்த கோயிலை, திருச்சியைச் சேர்ந்த பார்த்தி என்ற தொண்டு அமைப்பினர், இங்குள்ள நீரை எல்லாம், மோட்டார் மூலம் வெளியேற்றி, மிகவும் சிரமப்பட்டு, இந்தக் குகையில் இருந்த சகதிகளை எல்லாம், சுத்தப்படுத்தி உள்ளனர்.

தற்போது, இந்தக் குடைவரைக் கோயிலில் உள்ள சிவலிங்கம், பல நுாற்றாண்டுகள் கழித்து, மக்களுக்கு காட்சி தந்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a cave Temple Shiva Dharsan


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->