ஈரோட்டில்., காரை ஆட்டைய போட்டு காருடன் சிறகடித்த ஓட்டுநர்.!! நடுரோட்டில் புழுதியை கிளப்பிய ஓட்டுனரின் பரிதாபங்கள்.!! - Seithipunal
Seithipunal


   

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெரிய சேமூர் நந்தவனத்தோட்டத்தை சார்ந்தவர் நவுஷாத். இவரது மகனின் பெயர் சபீர் (33). ஈரோடு நகரில் வசிக்கும் தர்மலிங்கம் என்பவரின் வாகனத்தை வாடகைக்கு இயக்கி வருகிறார். இந்த வாகனத்தை கோயம்புத்தூர் மாவட்டம் ஆர்.எஸ்.புரத்தை சார்ந்த இராஜாராம் என்பவர் வாடகைக்கு எடுத்து வந்தார். 

இவர் கடந்த சில நாட்களாக வாகனத்தை வாடகைக்கு எடுத்துக்கொண்டு., வாடகை பணத்தை கேட்டால் இன்று நாளை என்று தட்டிக்கழித்துக்கொண்டு இருந்துள்ளார். நீண்ட நாட்கள் ஆனதால் இராஜாராமை தொடர்புகொண்ட சபீர் பணத்தை கேட்டுள்ளார். 

இதனையடுத்து பெருந்துறைக்கு வந்து பணத்தை பெற்றுக்கொள்ளும் படி இராஜாராம் கூறவே., இதனை நம்பிய சபீர் வாகனத்தில் சென்றுள்ளார். பெருந்துறைக்கு சென்று பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த சபீர் தேநீர் அருந்துவதற்காக சென்றுள்ளார். பின்னர் தேநீர் அருந்திவிட்டு வந்த போது வாகனத்தை காணாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். 

சபீரின் அலைபேசி வாகனத்தில் இருப்பதை அறிந்த அவர் உடனடியாக அலைபேசிக்கு தொடர்பு கொண்ட போது., அலைபேசி அனைத்து வைக்கப்பட்டு இருப்பதை கண்டு பெரும் அதிர்ச்சியடைந்தார். மேலும் இந்த சம்பவம் குறித்து உடனடியாக காரின் உரிமையாளருக்கு தகவல் வழங்கினார். 

தகவலை அறிந்ததும் சம்பவம் குறித்து பெருந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு பெருந்துறை சுங்கச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது கோயம்புத்தூரில் இருந்து பெருந்துறையை நோக்கி கார் வந்ததை கவனித்த காவல் துறையினர் ஓட்டுனரிடம் விசாரணை மேற்கொண்ட போது முன்னுக்கு பின் முரணாக பதிலளிக்கவே., அவரை காவல் துறை பாணியில் விசாரித்த போது உண்மை வெளிவந்தது. 

உடனடியாக அவரை கைது செய்த காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறையிலடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A CAR THEFT IN ERODE POLICE ARRESTED IMMEDIATELY


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->