தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்ததற்காக சிறுவர்கள் உள்பட 90 பேர் கைது! - Seithipunal
Seithipunal


தீபஒளி பண்டிகைக்காக பட்டாசுகள் வெடிக்கப்படும் நேரமாக தமிழகத்தில் காலையில் 6 மணி முதல் 7 மணி வரையிலும்., மாலையில் 7 மணி முதல் 8 மணி வரை பட்டாசுகள் வெடிக்கலாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

அதன் படி தமிழகத்தில் பட்டாசுகள் வெடிக்க வழங்கப்பட்டுள்ள நேரத்தில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்கவேண்டும்., மாறாக பட்டாசுகளை அனுமதிக்காத நேரத்தில் வெடித்தால் எந்த வித நிபந்தனையும் இன்றி கைது செய்யப்பட்டு 6 மாத காலம் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று அறிவிப்பை வெளியிடப்பட்டது.

இந்நிலையில்., திருநெல்வேலியில் உள்ள பகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட அதிகமான நேரத்தில் பட்டாசுகளை வெடித்ததால் 6 நபர்கள் கைது மற்றும் 7 சிறுவர்கள் நபர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதையடுத்து மேலும் கோவையில்  விதிமுறை மீறி பட்டாசு வெடித்ததாக சுமார் 42  நபர்கள் மீது வழக்குப்பதிவு , திருப்பூரில் 30 நபர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் பல்வேறு இடங்களில் காவல் துறையினர் பட்டாசு வெடிப்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வருகிறார்கள். இது போன்ற செயலால் பெற்றோர்களிடையே தமிழக அரசின் மீதும், உச்சநீதிமன்றத்தின் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

English Summary

90 people, including children, detained for crackers

செய்திகள்Seithipunal