பசுமை வழிச்சாலை.. மக்களின் கருத்தையும், ஒப்புதலையும் பெற்றுவிட்டோம்.! தமிழக அமைச்சர் தகவல்.!! - Seithipunal
Seithipunal


சென்னையில் இருந்து சேலத்திற்கு செல்ல புதியதாக பசுமை வழி சாலை அமைக்க அரசு முயற்சி எடுத்து வருகிறது. இந்த திட்டத்தை மத்திய அரசிடம் போராடி பெற்றுள்ளதாகவும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

சென்னையில் தொடங்கி சேலம் வரையில் இடையே 277 கி.மீ. தூரத்துக்கு 8 வழி பசுமை சாலையாக அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தின் மதிப்பு ரூ.10 ஆயிரம் கோடியாகும். 

இந்த சாலையானது சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம் ஆகிய 5 மாவட்டங்கள் வழியாக சென்னையை வந்தடையும், இந்த பசுமை வழி சாலை 8 வழி விரைவு சாலையாக அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கு, சாலை அமையவுள்ள 5 மாவட்ட விவசாயிகளும், விவசாய நிலத்தை கையகப்படுத்தி போடப்படும் சாலை வேண்டாம் என்று எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில், இந்த 8 வழிச்சாலைக்கு பொதுமக்களின் கருத்துகளை கேட்டு, அவர்களின் ஒப்புதலை பெற்ற பின்பு தான் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற, தமிழ் விவசாயிகள் சங்க மாநாட்டில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது, ''8 வழி பசுமைச்சாலை திட்டத்திற்காக திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் நிலம் கையகப்படுத்தும் பணி முறைப்படி நடந்துள்ளது. அந்தந்த மாவட்ட ஆட்சியர்களின் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அவர்களின் தலைமையில் மக்களிடம் பேசி, மக்களின் கருத்தை கேட்டு, பின்னர் அவர்களின் ஒப்புதல் வாங்கிய பின்புதான், இந்த சாலை திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தப்படுகிறது''. என தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

8 WAY ROAD TN MINISTER NEW INFORMATION


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->