8 வழி சாலைக்கு எதிர்ப்பு! திருவண்ணாமலையில் மீண்டும் பரபரப்பு!! - Seithipunal
Seithipunal


பசுமை வழி சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயி ஒருவர் தீக்குளிக்க முயன்றார். அதேபோல, செய்யாறில் 75 வயது முதியவர் ஒருவர் கிணற்றிலேயே விழுந்து தற்கொலைக்கு முயன்றார். 

இதனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்றும் பதற்றமான சூழ்நிலையே காணப்படுகிறது. சென்னை-சேலம் 8 வழி பசுமை சாலை அமைக்க காஞ்சிபுரம், சேலம், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் விவசாயிகள் கடும் கொந்தளிப்பிலும், 5 மாவட்டங்களில் பதற்றமான சூழ்நிலையும் நிலவி வருகின்றது. 

திருவண்ணாமலை மாவட்டத்தை பொறுத்தவரை, செய்யாறு, வந்தவாசி, போளூர், ஆரணி மற்றும் செங்கம் வரையில் 122 கிலோ மீட்டர் தொலைவிற்கு விவசாய நிலங்கள், பாசன கிணறுகள், வீடுகளை கையகப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக அளவீடு பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. அளவீடு மேற்கொள்ள அதிகாரிகள் வரும்போது, விவசாயிகள் தங்கள் எதிர்ப்புகளை போராட்டங்கள் வாயிலாக வெளிப்படுத்தி வருகிறார்கள். 
 
இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்று கூறி, அவர் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி கொண்டார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். விவசாயி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றியதை தொடர்ந்து அளவீட்டு பணியை பாதியிலேயே நிறுத்தி அதிகாரிகள் வெளியேறியுள்ளனர். 

அதேபோல, செய்யாறிலும் 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து முதியவர் ஒருவர் கிணற்றில் குதித்தார். அவருக்கு வயது 75. அவரை தொடர்ந்து மேலும் 2 பேரும் அதே கிணற்றில் விழுந்து தற்கொலைக்கு முயன்றனர். இதையடுத்து, கிணற்றுக்குள் விழுந்தோரை மீட்கும் நடவடிக்கையில் காவல் துறை ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பும் பதட்டமும் நிலவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

8 way road protest stay tuned back in thiruvannamalai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->