உடல் உறுப்பு தானத்தின் விழிப்புணர்வுக்காக, 77 வயது முதியவர், பைக்கில், 10 ஆயிரம் கி.மீ. துாரம் பயணம்….! உற்சாக வரவேற்பு….! - Seithipunal
Seithipunal


 

புனேயைச் சேர்ந்தவர் பிரமோத் லட்சுமணன் (வயது 77). விவசாயி. உடல் உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, கடந்த அக்டோபர் மாதம் 20-ஆம் தேதி, புனேயில் இருந்து 10 ஆயிரம் கி.மீ. பயணம் செய்வதற்காக, தனது பைக்கில் புறப்பட்டார்.

இவர் தனது பயணத்தில், பல் வேறு மாநிலங்களைக் கடந்து செல்கிறார். தான் செல்லும் இடங்களில், தான் வைத்திருக்கும், துண்டு பிரச்சாரத்தை மக்களிடம் கொடுக்கிறார். உடல் உறுப்பு தானத்தால், ஒருவர் இறந்த பிறகும், தன் உறுப்புகளின் வாயிலாக, மற்றொருவர் உருவில், உயிர் வாழ முடியும், என்பதை எடுத்துக் கூறி, வலியுறுத்தி வருகிறார்.

இந்தப் பயணத்தின் வழியே, அவர் கோவை வந்தார். அங்கு அவருக்கு, சிறப்பான வரவேற்பு அளிக்கப் பட்டது. பின், அவர் கோவை அரசு மருத்துவமனைக்குச் சென்று, அங்கிருந்த டீன் உள்ளிட்ட மருத்துவர்களைச் சந்தித்து உரையாடினார்.

அவரை, மருத்துவமனை ஊழியர்கள் அனைவரும், உற்சாகத்துடன் வழி அனுப்பி வைத்தனர்.

தன் வயதைப் பற்றிப் பொருட் படுத்தாமல், விழிப்புணர்வு பிரசாரம் செய்து வரும் லட்சுமணனை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

77 years old man travelling 10 thousand k.m.


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->