#BREAKING || தமிழக முழுவதும் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! முழு விவரம் இதோ! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசு பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக தமிழகம் முழுவதும் 6 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடம் மாற்றம் செய்துள்ளது. அதன்படி, 

1) சென்னை மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த அருணா நீலகிரி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

2) கூட்டுறவுத்துறை கூடுதல் செயலாளராக பணியாற்றி வந்த ராஷ்மி சித்தார்த் ஜாகடே சென்னை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். 

3) நீலகிரி மாவட்ட ஆட்சியராக இருந்த அம்ரித் நில நிர்வாக இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். 

4) வேளாண்துறை செயலாளர் நந்தகோபால் வரலாற்று ஆராய்ச்சி மற்றும் ஆவண பிரிவு ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். 

5) பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் துறையின் சிறப்புச் செயலாளராக இருந்த அனீஷ் நகர்ப்புற நிதி கட்டமைப்பு வளர்ச்சி கழகத்தின் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். 

6) விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சித் நிறுவனத்தின் திட்ட இயக்குனராக இருந்த சித்ரா விஜயன் நகர்ப்புற புதுப்பித்தல் முதன்மை இயக்கு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் தமிழ்நாடு அரசின் தொழில்துறை செயலாளராக இருந்த கிருஷ்ணன் மத்திய அரசின் பணிக்கு சென்றதால் அந்த பதவி இன்னும் நிரப்பப்படாமல் காலியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

6 IAS officers transferred across TamilNadu


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->