#BREAKING || 4 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.! உள்துறைச் செயலாளர் அதிரடி உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் பணிபுரிந்து வரும் 4 ஐபிஎஸ் அதிகாரிகளை பதவி உயர்வுடன் பணியிட மாற்றம் செய்து உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் உத்தரவிட்டு உள்ளார்.

அதன்படி,

1) திருச்சி சிறப்பு காவல் படை கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த ரவிச்சந்திரன் காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று திருச்சி காவல்துறை தலைமையகத்தின் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

2) விழுப்புரம் காவல்துறை ஆட்சேர்ப்பு பள்ளியில் கூடுதல் காவல் கண்காணிப்பதாக பணியாற்றி வந்த ரமேஷ்பாபு காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று சென்னை உயர் நீதிமன்றத்தின் காவல் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

3) அரியலூர் காவல்துறை தலைமையகத்தில் கூடுதல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த மயில்சாமி காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று சென்னை அறிவுசார் சொத்துரிமை அமலாக்க பிரிவு கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

4) சேலம் இணையவழி குற்ற பிரிவு கூடுதல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த செல்ல பாண்டியன் காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று ஆவடி சிறப்பு காவல் படை கமாண்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

4 ips officers transferred with promotion in TamilNadu


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->