அரசாணை வெளியானது.. தலைநகரமும் அடங்கியது - தமிழகத்தை அதிர வைக்கும் தகவல்.! - Seithipunal
Seithipunal


போதிய மழை பெய்யாததால், தமிழகத்தில் சென்னை உள்பட 24 மாவட்டங்களை வறட்சி மாவட்டமாக அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டது.

இது குறித்து தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா வெளியிட்டுள்ள அரசாணையில்,

தமிழகத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவ காலத்தில் பெய்த மழையளவு பகுப்பாய்வு செய்யப்பட்டது. அதில் கோவை, கன்னியாகுமரி, தேனி, தூத்துக்குடி, நெல்லை, திருப்பூர், நீலகிரி ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள 38 வட்டாரங்கள் பற்றாக்குறை மற்றும் மிக பற்றாக்குறை என்ற அளவில் மழைப்பொழிவை பெற்றுள்ளன.

அங்கு நிலத்தடி நீர் குறைந்திருப்பதால் கோடை காலத்தில் நீரியல் வறட்சி ஏற்படும். எனவே இந்த வட்டாரங்கள் வறட்சி வட்டாரங்களாக அறிவிக்கப்படுகின்றன.

அதுபோல மழைப்பொழிவை குறைவாக பெற்றுள்ள சென்னை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், சேலம், வேலூர், திருச்சி, பெரம்பலூர், திருவள்ளூர், நாமக்கல், விருதுநகர், காஞ்சீபுரம், மதுரை, திண்டுக்கல், ஈரோடு, புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சை, விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலூர், நாகை, கடலூர், ராமநாதபுரம் ஆகிய 24 மாவட்டங்கள் நீரியல் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவிக்கப்படுகின்றன' என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

24-Districts-including-Chennai-Announcement-as-Drought


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->