அதிர்ந்து போன தமிழகம்.! வெளியான தகவல்.!! 20000 டீனேஜ் பெண்கள் கர்ப்பம்.!! - Seithipunal
Seithipunal


 

பெண் சுதந்திரம் மற்றும் பெண் புரட்சி என்று பெண்கள் தற்போது பல விதமான சாதனைகளை படைத்தது வரும் நிலையில்., வெளியான தகவலை கண்டு பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அந்த அதிர்ச்சியூட்டும் தகவலை மாநில சுகாதார துறை வெளியிட்டுள்ளது. 

அந்த தகவலில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை உள்ள 9 மாதங்களில் சுமார் 20000 பெண்கள் கருவடைந்துள்ளதாகவும்., இந்த 20 ஆயிரம் பெண்களும் 18 வயது மற்றும் 18 வயதை விட குறைவானவர்கள் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

இது குறித்து கருத்து தெரிவித்த தேசிய சுகாதார இயக்கத்தின் தலைவர்., இந்த கருவடைந்த பெண்களில் சிறுமிகளே அதிகம். அவர்களில் பெரும்பாலானோருக்கு திருமணம் முடிந்த நிலையில் கர்ப்பமடைந்துள்ளனர். 

இந்த சம்பவத்தை நினைவு கூறுகையில்., இன்னும் பெண்களுக்கு குழந்தை திருமணம் நடைபெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும்., கடந்த ஒரு வருடத்தில் சுமார் 6965 குழந்தை திருமணங்கள் மட்டுமே அதிகாரிகளின் கவனத்திற்கு வந்துள்ளது. 

மீதமுள்ள திருமணங்கள் அனைத்தும் அரசின் கவனத்திற்கு வராமல் மறைமுகமாக நடைபெற்றுள்ளதும் தெரியவந்துள்ளது. இது போன்ற குழந்தை திருமணங்களை தடுப்பதற்கு மாநில அரசு சற்று அதிகளவு முக்கியத்துவம் அளித்து பணியாற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.   


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

20000 GIRL CHILDREN OR TEENAGE PREGNANT


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->