18 ஆண்டுகளாக கோமாவில் உள்ள தாய்.. படிப்புக்கும் பணம் இல்லாமல் தவிக்கும் மகள்..! நீதிமன்றம் எடுத்த முடிவு..!! - Seithipunal
Seithipunal


18 ஆண்டுகளாக கோமா உள்ள தாய்.. படிப்புக்கும் பணம் இல்லாமல் தவிக்கும் மகள்..! நீதிமன்றம் எடுத்த முடிவு..!!

கன்னியாகுமரி மாவட்டம் பொன்மனை பகுதியை சேர்ந்த ஆதர்ஷா என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையின்  நீதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார். அந்த கடிதத்தில், அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

எனக்கு வயது 18 ஆகிறது. தற்போது நான் பி.ஏ. ஆங்கிலம் 2 ஆம் ஆண்டு படித்து வருகிறேன். கடந்த 18 ஆண்டுகளுக்கு முன் எனது தாயார் ஷோபாவை பிரசவத்துக்காக குலசேகரத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது தான் நான் பிறந்துள்ளேன். அந்த நேரத்தில் எனது தாயாருக்கு அளித்த சிகிச்சை பலனின்றி, அவர் கோமா நிலைக்கு சென்றுவிட்டார்.

கடந்த 18 வருடங்களாகவே அவர் கோமா நிலையிலேயே உள்ளார்.  என்னுடைய தந்தை எங்களை விட்டு பிரிந்து மறு  திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் நானும், எனது தாயாரும் வாழ வழியில்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறோம்.

எனது தாய்க்கு அளிக்கப்பட்ட  தவறான சிகிச்சைக்காக இதுவரை எந்த இழப்பீடும்,  எந்த உதவியும் எங்களுக்கு கிடைக்கவில்லை. எனது தாயாருக்கு மருத்துவ சிகிச்சைக்கும், எனது படிப்புக்கும் பணம் இல்லாமல் தவித்து வருகிறோம். எங்களுக்கு உதவ வேண்டும் என அந்த கடிதத்தில் தெரிவித்து இருந்தார். 
இவ்வாறு கடிதத்தில் எழுதி இருந்தார்.

இந்த கடிதத்தின் அடிப்படையில் மாணவி கூறிய பிரச்சினை குறித்து மதுரை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை எடுத்து விசாரித்தது. 

மேலும்,நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் குழு, ஷோபாவின் வீட்டுக்கு நேரில் சென்று அவருக்கு சிகிச்சை அளிக்கலாமா? சிகிச்சை பலன் அளிக்குமா? இயல்புநிலைக்கு வருவாரா? என்பது குறித்து பரிசோதித்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், ஷோபாவை பரிசோதனை செய்து அறிக்கையை நீதிமன்றத்தில் மருத்துவ குழு தாக்கல் செய்தது. அதில், அவருக்கு சிகிச்சை அளித்தாலும் திரும்ப இயல்பு நிலைக்கு வரமாட்டார் என மருத்துவர்கள் குழு நீதிமன்றத்தில் அறிக்கை அளித்தனர்.

இதையடுத்து நீதிபதிகள் தெரிவித்ததாவது, ‘‘ஷோபாவின் குடும்பத்தினருக்கு ஏற்கனவே மாதந்தோறும்1000 ரூபாய் அரசு சார்பில் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. இந்நிலையில், அவர்களின் குடும்பத்திற்கு மாதந்தோறும் ரூ.5 ஆயிரத்தை அரசு சார்பில் குமரி மாவட்ட கலெக்டர் வழங்க வேண்டும் என கூறியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

18 Years Problem


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->