15 வது ஊதிய ஒப்பந்த விவகாரம் - தமிழக அரசு குழு அமைப்பு! - Seithipunal
Seithipunal


போக்குவரத்து தொழிலாளர்களின் 15 ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தை நடத்த தமிழக அரசு சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

96 மாதங்கள் நிலுவையில் உள்ள ஓய்வு பெற்றவர்களுக்கான அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற் சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இதன் தொடர்ச்சியாக நேற்று நடைபெற்ற பேச்சு வார்த்தையில் 15வது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தை நடத்த தமிழக அரசு சார்பில் குழு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

அந்த வகையில் 15ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தை நடத்த தமிழக அரசு தற்போது குழு அமைத்து போக்குவரத்து செயலாளர் உத்தரவிட்டுள்ளார். 

குறிப்பாக ஊதிய உயர்வு குறித்து பேச வேண்டும் என கடந்த மாதம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிற்சங்கத்தினர் தெரிவித்திருந்த நிலையில் தற்போது குழு அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த குழுவில் நிதித்துறை செயலாளர், போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர்கள் என மொத்தமாக 14 பேர் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

15th Wage Agreement Issue TN Govt Committee Organization


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->